Kanda Sashti Special: குழந்தை வரம் தரும் குழந்தை சுவாமி!
குழந்தை செல்வம் இல்லாதவர்கள் கந்த சஷ்டி விரதத்தை மேற்கொண்டால் அந்த முருகப் பெருமானே குழந்தையாக வந்து பிறப்பார்.
எந்த வினையானாலும் கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் முக்கியமானது கந்த சஷ்டி விரதம். முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று போரில் வெற்றி பெற்றதையே கந்த சஷ்டியாக கொண்டாடுகிறோம். ஐப்பசி வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரையிலான ஆறு நாட்களும் சஷ்டி விரத நாட்கள் ஆகும். இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது.
இந்த ஆறு நாட்களில் சிறிதளவு பால், பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் பருகி ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. ஆறாம் நாளான கந்த சஷ்டி அன்று முழுவதுமாக விரதம் இருக்க வேண்டும். கடும் விரதம் இருக்க முடியாதவர்கள் முதல் 5 நாட்களும் இரவு ஒருவேளை பால் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் முழு விரதத்தை கடைபிடிக்கலாம். குழந்தை செல்வம் இல்லாதவர்கள் கந்த சஷ்டி விரதத்தை மேற்கொண்டால் அந்த முருகப் பெருமானே குழந்தையாக வந்து பிறப்பார். இதைத்தான் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பார்கள்.
அதாவது கந்த சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும். வசிஷ்ட முனிவரிடம் இருந்து இவ்விரதத்தை பற்றி அறிந்த முசுகுந்தச் சக்கரவர்த்தி, முனிவர்கள், தேவர்கள் என பலரும் கடைபிடித்துள்ளனர். 'செகமாயை உற்று' என்று தொடங்கும். சுவாமி மலைத் திருப்புகழில் முருகனே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். இந்த திருப்புகழை தினமும் பாராயணம் செய்தால் நல்ல குழந்தை கிடைக்கும் என்பது ஐதீகம். கந்த சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை தரிசனம் செய்தால் நோய்கள், கடன் பிரச்னைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்