Sun and Ketu: விரைவில் ஜோடிபோடப்போகும் சூரியன் - கேது.. செப்டம்பரில் பணத்தில் விளையாடப்போகும் மூன்று ராசிகள்
Sun and Ketu: விரைவில் ஜோடிபோடப்போகும் சூரியன் - கேது மற்றும் இதனால் செப்டம்பரில் பணத்தில் விளையாடும் மூன்று ராசிகள் குறித்துப் பார்ப்போம். செப்டம்பர் மாதத்தில் பல வருடங்களுக்குப் பிறகு கன்னி ராசியில் சூரியன் கேது ஒன்று சேர்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்துப் பார்ப்போம்.
Sun and Ketu: கிரகங்களின் அரசனான சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் ராசிகளை மாற்றுகிறார். சூரிய பெயர்ச்சி மனித வாழ்க்கையிலும், நாட்டிலும், உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சூரிய பகவான் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி கன்னி ராசியில் நுழைவார். கன்னி ராசியில் சூரிய பெயர்ச்சி ஆகும்போது சூரியன்-கேது சேர்க்கையை உருவாக்கும். கேது ஏற்கனவே கன்னி ராசியில் ஆட்சி புரிகிறார். கன்னி ராசியில் உருவாகும் சூரியன்-கேது சேர்க்கையால் சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறது என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
அதிசயங்களைச் செய்யும் சூரியன்-கேது சேர்க்கை:
சூரியன் தைரியம் மற்றும் ஆன்மாவின் காரணியாக கருதப்படுகிறார். சூரிய பகவான் மற்றும் கேதுவின் சேர்க்கை கிரகண யோகாவாக உருவாக்குகிறது. இது ஜோதிடத்தில் மங்களகரமானதாக கருதப்படவில்லை. இருப்பினும், சில ராசிகளுக்கு, கன்னி ராசியில் சூரியன்-கேது சேர்க்கை வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களைக் கொண்டுவரும். சூரியன்-கேது சேர்க்கை எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை சில ராசியினருக்கு நன்மையைத் தரும். அப்படி நன்மைபெறும் ராசிகள் குறித்து அறிந்துகொள்வோம்.
ரிஷபம்:
சூரியன்-கேது சேர்க்கை ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிசயங்களைக் காண்பிக்கும். இந்த சேர்க்கையின் விளைவால், நீங்கள் வாழ்க்கையில் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வுடன் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். தொழிலில் புதிய அடையாளத்தை உருவாக்க முடியும். தற்செயலான பண ஆதாயங்களுக்கான அறிகுறிகள் உள்ளன. எதிரிகளின் தொல்லை சற்று குறையும்.
சிம்மம்:
சூரியன்-கேது சேர்க்கை சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த சேர்க்கையின் விளைவால், உங்கள் நிதி நிலைமை முன்பைவிட சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் சிக்கித் தவிக்கும் எந்த வேலையையும் முடிக்க முடியும். வம்பு வழக்குகளில் இருந்து வெளியில் வருவீர்கள்.
மேஷம்:
சூரியன் -கேது சேர்ந்து மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் வெற்றியைத் தரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு லாபகரமானதாக இருக்கும். நீங்கள் பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவீர்கள். அண்டை வீட்டுக்காரர்களுடன் இருந்துவந்த மனக்கசப்பு சற்று குறையும். சொத்து வாங்கும் வாய்ப்பு உருவாகலாம்.
தனுசு:
சூரியன்- கேது சேர்ந்து தனுசு ராசிக்காரர்களுக்கு செல்வத்தைப் பொழியலாம். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புகள் கிடைக்கும். சமூக மரியாதையும் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களது தொழிலில் தடை ஏற்படுத்தியவர்கள், உங்களிடம் பணிந்துபோவார்கள். நம்பிக்கையுடன் புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பர்.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்