Tamil News  /  Astrology  /  Simple Remedy For Remove Kan Thirusti

கண் திருஷ்டியால் ஒரே கஷ்டமா ..இதை செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்!

Karthikeyan S HT Tamil
Nov 20, 2023 08:12 AM IST

வீட்டில் வாசலுக்கு எதிராக, கண் திருஷ்டி கணபதி படத்தை வைத்தால் திருஷ்டியும் தீய சக்திகளும் வெளியேறும் என்பது உறுதி.

கண் திருஷ்டி
கண் திருஷ்டி

ட்ரெண்டிங் செய்திகள்

சிலருடைய பார்வை தீய சக்தியை ஏற்படுத்தும். அந்த வகையில் ஒருவரின் முன்னேற்றத்தைக் கண்டு மற்றவர்கள் பொறாமை கொள்வதே கண் திருஷ்டியாக கருதப்படுகிறது. கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும், எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு. அதுபற்றி இங்கு பார்ப்போம்.

ஆன்மீகத்தின் படி கண் திருஷ்டி ஒருவரது வாழ்வில் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்குவதாக சொல்லப்படுகிறது. உங்கள் வீட்டிற்குள் தீய சக்தி நுழையாமல் இருக்க, கெட்ட எண்ணம் கொண்ட மனிதர்களின் திருஷ்டி தாக்காமல் இருக்க வீட்டு வாசலில் பௌர்ணமி நாளில் நீர் பூசணி கட்டி தொங்க விட்டால் கண் திருஷ்டி விளகும். கண் திருஷ்டி நீங்க சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில், சிறிது ஏலக்காய், கிராம்பு, மூன்று அல்லது நான்கு கற்பூரம் சேர்த்து எரிக்க வேண்டும். அந்த நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் போது அதை வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் காட்ட வேண்டும். இதை பரிகாரமாக அவ்வப்போது வீட்டில் செய்து வந்தால் கண் திருஷ்டி விலகி நேர்மறை ஆற்றலும், தெய்வீக சக்தியும் வீட்டில் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.

கல் உப்பைக் கொஞ்சம் எடுத்து தலையில் மூன்று முறை சுற்றி ஓடும் தண்ணீரில் போட வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு வேஷ்டியில் ஒரு சிறிய துணியைக் கிழித்துத் திரி செய்து அந்த திரியைத் தலை முதல் கால் வரை வலது புறம் தடவி மற்றொரு திரியை இடது புறமாகத் தடவி அதனைச் சுவர் ஓரமாக வைத்து எரித்து விட வேண்டும். குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோஷமும் நீங்குவதற்குத் தெருவில் இருந்து மண் கொஞ்சம் எடுத்து வந்து, கடுகு உப்பு 3 காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்த அமர்ந்து 3 முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டு விட வேண்டும். இது கண் திருஷ்டியைப் போக்கும் என நம்பப்படுகிறது. வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணிக்குக் கற்றாழை கட்டி தொங்க விடலாம்.

வாசலுக்கு மேல் ஒரு எலுமிச்சை, 5 பச்சை மிளகாய் என மாறி மாறி கயிற்றில் கோர்த்து தொங்கவிடலாம். இதனை செவ்வாய் கிழமைகளில் செய்யதால் நல்ல பலன் கிடைக்கும். திருமணம், கிரகப்பிரவேசம், பிறந்த குழந்தையயும், தாயையும் வீட்டிற்கு அழைத்தல் போன்ற நிகழ்வுகளில் கண் திருஷ்டியை குறைக்க ஆரத்தி எடுத்து திலகம் இட வேண்டும். வீட்டில் வாசலுக்கு எதிராக, கண் திருஷ்டி கணபதி படத்தை வைத்தால் திருஷ்டியும் தீய சக்திகளும் வெளியேறும் என்பது உறுதி.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்