அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டுமா? - இந்த உணவுகளை தானம் செய்யலாம்தானே!
Food Astrology: ஜோதிட சாஸ்திரத்தின் படி தானம் வழங்குவது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. அந்தவகையில் எந்தெந்த உணவுகளை தானம் செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
முடிந்தவரை அன்னதானம் செய்யுங்கள். எத்தனையோ தானங்களை வாரிவாரிக் கொடுத்திருந்தாலும் ஜோதிட சாஸ்திரத்தின் படி தானம் வழங்குவது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. அந்தவகையில் எந்தெந்த உணவுகளை தானம் செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
அன்னதானம்
தானங்களில் மிகச்சிறந்தது அன்னதானம். தானங்களில் மிக உயர்ந்த சிறப்பான ஒரு இடம் அன்னதானத்திற்கு உண்டு. காரணம், ஒரு மனிதன் உணவை மட்டுமே போதும் என்று சொல்வான். அன்னதானம் செய்வதன் மூலம் அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்மை சுற்றியுள்ள தரித்திரமும் விலகும் என்றும் கூறப்படுகிறது.
வஸ்திர தானம்
வஸ்திர தானத்திற்கு ஒரு அதீத சக்தி உண்டு என்கிறது சாஸ்திரம். துணிகளை மற்றவர்களுக்கு தானமாக வழங்குவதன் மூலம் தீராத நோய், பரம்பரை நோய் விலகும் என்றும் சொல்லப்படுகிறது. வஸ்திரத்தை மனமுவந்து மற்றவர்களுக்கு வழங்கினால் அவர்களுக்கு எத்தகைய பாவங்களும் வந்து சேருவது இல்லை. நீண்ட ஆயுள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
தேன் தானம்
சுத்தமான தேனை தானம் செய்தால் புத்திர பாக்யம் ஏற்படும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
தீப தானம்
பயத்தை நீக்குவதற்கு தீபத்தை தானமாக வழங்கலாம். இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் தீரும் என்று சொல்லப்படுகிறது.
அரிசி தானம்
தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலக ஏழைகளுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும். அவ்வாறு அரிசி தானம் செய்வதன் மூலம் பாவங்களில் இருந்து விடுபட முடியும் என்று சொல்லப்படுகிறது.
தேங்காய் தானம்
தேங்காய் உடைத்து விட்டு செய்யும் எந்த ஒரு காரியமும் தடை இல்லாமல் அப்படியே நடக்கும் என்பது ஐதீகம். ஒருவருக்கு தேங்காய் தானம் செய்வதன் மூலம் நாம் மனதில் நினைத்தது எல்லாம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
பழங்கள் தானம்
பழங்கள் தானம் செய்தால் பல ஜீவன்களை வதைத்த சாபம் தீரும் என்பது நம்பிக்கை. ஆயுள் விருத்தியாகும். பழங்களை யாருக்கு எங்கு வேண்டுமானாலும் தானம் செய்யலாம். ஏதேனும் ஒரு அரசு மருத்துவமனைக்கு சென்று, நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு ஆப்பிள், மாதுளை போன்ற விலை அதிகமுள்ள அவர்களால் வாங்க இயலாத பழங்களை வாங்கிக் கொடுக்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்