’சிம்ம ராசிக்கு அஷ்டம சனி! செம்ம அடி கொடுக்க போகும் சனி பகவான்! ஆட்டம் ஆரம்பம்!’ சனி பெயர்ச்சி பலன்கள் 2025
வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதனால் கும்பம் ராசியில் கண்ட சனியாக இருந்த சனி பகவான், மீனம் ராசியில் அமர்வதன் மூலம் அஷ்டம சனியாக மாற உள்ளார்.
காலபுருஷனின் 5ஆம் வீடான சிம்மம் ராசியில் மகம், பூரம், உத்திரம் ஆகிய நட்சத்திரங்கள் அடக்கம். கிரகங்களின் ராஜாவான் சூரிய பகவான் சிம்மம் ராசியின் அதிபதியாவார்.
சிம்மம் ராசியும் சனி பகவானும்!
வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதனால் கும்பம் ராசியில் கண்ட சனியாக இருந்த சனி பகவான், மீனம் ராசியில் அமர்வதன் மூலம் அஷ்டம சனியாக மாற உள்ளார். சிம்ம ராசியின் அதிபதியான சூரிய பகவானும், சனி பகவானும் பகை கிரகங்கள் ஆகும்.
பிரச்னை! தடை! தாமதம்! அலைக்கழிப்பு!
சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாழ்கையாக இருக்கும் நிலையில், அஷ்டம சனியால் தேவை இல்லாத அலைச்சல், மன சஞ்சலம், உறவுகளில் பிரச்னை, பண வரவில் தடை, அலைக்கழிப்பு ஆகியவற்றை சந்திக்க நேரிடும்.
ரியல் எஸ்டேட், ஹோட்டல், அரசு ஊழியர்கள், மொத்த வியாபாரிகள், விவசாயம், இரும்பு வியாபாரம் சார்ந்து இயங்கும் சிம்மம் ராசிக்காரர்களுக்கு தொழில் முடக்கம் உண்டாகும். தசாபுத்தி நிலைகளுக்கு ஏற்ப இவை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம்.
புதிய தொழில் தொடங்குதல், புதிய முயற்சிகளை செய்தல் உள்ளிட்டவற்றை முடிந்த வரை தள்ளிபோடுவது நல்லது. திருமணத்திற்காக முயற்சி செய்யும் சிம்மம் ராசிக்காரர்கள் வாழ்கை துணையிடம் அனுசரித்து செல்வது அவசியம். மனதளவில் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.
பணம் கொடுக்கல் வாங்கலில் மிக கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம் என்பதால் பேச்சில் கவனம் தேவை. தேவை இல்லாமல் வாக்கு கொடுப்பதை தவிர்க்க பாருங்கள்.
வெளிநாடு சென்றால் நலம்
அஷ்டம சனி காலத்தில் சிம்மம் ராசியினருக்கு மனம் பக்குவப்படும். வெளிநாடு செல்வதற்கு இது சரியான நேரம். வெளிநாட்டில் வியாபாரம், வேலை, கல்விக்காக செல்ல முயற்சி செய்வோருக்கு அருமையான காலம் இது.
உடல் ஆரோக்கியத்தில் மிக கவனமாக இருக்க வேண்டிய காலம். வாகனங்களை இயக்கும் போதும், பயணங்களின் போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வண்டி வாகனங்களில் வித்தைகள் காட்டினால் விபத்து நேரிடலாம்.
வழிபாடும் பரிகாரமும்!
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறுவில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனி பகவானை வழிபாடு செய்து, நள தீர்த்தத்தில் குளித்து, நல்லெண்ணை தீபம் ஏற்றினால் நன்மைகள் உண்டாகும். சனி பகவானின் காயத்ரி மந்திரத்தை தினமும் 21 முறை உச்சரிப்பதன் மூலமும், உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு சென்று எள் தானம் செய்வதன் மூலமும் வாழ்கையில் உண்டாகும் பிரச்னைகள் நீங்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.