Sani: பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழையும் சனி.. சைக்கிளில் இருந்து காரில் பயணிக்கப்போகும் ராசிகள்!
Sani: பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழையும் சனி பகவானால், சைக்கிளில் இருந்து காரில் பயணிக்கப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.
Lord Sani: ஜோதிடத்தில் சனி பகவான் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறது. சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகும்.
அதுமட்டுமின்றி சனி பகவான் நீதிமான் ஆவார். ஒருவர் செய்யும் கர்மவினைகளுக்கு ஏற்ப நல்ல பலன்களையும், கெடுபலன்களையும் தரக்கூடியவர்.
சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி:
சனி பகவான், அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். தற்போது ஆகஸ்ட் 18ஆம் தேதி சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழையப் போகிறார்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் நுழைவதன் மூலம், சில ராசிகளின் அதிர்ஷ்டம் நிச்சயம் அதிகரிக்கும். சனி பகவான் மங்களகரமானவராக இருக்கும்போது, ஒரு நபரின் வாழ்க்கை ஒரு ராஜாவைப் போல மாறும். சனி பகவான் கெடுநிலையில் இருக்கும்போது சில ராசிக்காரர்களுக்கு துன்பத்தைத் தரும். பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி நுழைவது எந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
மேஷம்:
வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். இதனால் மேஷ ராசியினரின் மதிப்பும் மரியாதையும் உயரும். அவநம்பிக்கை மனப்பான்மையை கட்டுப்படுத்த முயற்சிசெய்வீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் புதிய திசையில் கவனம் செலுத்துவீர்கள்.வணிகத்திற்கு ஏற்ற காலம் இது. பழைய நண்பர் ஒருவரைச் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் கடும்போட்டிகளைச் சமாளித்து முன்னேறுவீர்கள்.
மிதுனம்:
வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி சனி பகவான், பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். இதனால் மிதுன ராசியினருக்குப் பணியிடத்தில் நல்ல சூழ்நிலை இருக்கும். மேலும் மிதுன ராசியினருக்கு தடைபட்ட பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.பழைய நோய்கள் தீரும். பணக் கஷ்டங்களால் இருந்த பிரச்னை மாறும். வருமானம் சீராக இருக்கும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களான கோயில்களுக்குச் செல்ல வாய்ப்பு ஏற்படும். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. எதிரிகளாக இருந்தவர்கள் நண்பர்கள் ஆவார்கள். எப்போதும் கோபத்தை மட்டும் கட்டுப்படுத்தவும்.
சிம்மம்:
வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி சனி பகவான், பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். இதனால் சிம்ம ராசியினர் தடைபட்ட பணத்தை திரும்பப்பெறுவார்கள். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். கடினமாக உழையுங்கள், லாபம் கிடைக்கும். முதலில் பண கொடுக்கல், வாங்கல் பிரச்னைகளைத் தீர்க்கவும். நீங்கள் பணிசெய்யும் துறையில் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றி கிடைக்கும். கலை மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் தொடங்க உரிய நேரம் இது. மதிப்பு மரியாதை உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்