தமிழ் செய்திகள்  /  Astrology  /  Signs That Will Reap Money Due To The Combination Of Mars And Venus

Mars and Venus: செவ்வாய், சுக்கிரன் கூட்டுசேர்க்கை: பணத்தை அறுவடை செய்யப்போகும் ராசிகள் இவைதான்!

Marimuthu M HT Tamil
Feb 26, 2024 12:02 PM IST

செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் தனசக்தியோகம் உண்டாகியுள்ளது. இதனால், பொருளாதாரத்தில் மேன்மைபெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்கை.
செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்கை.

ட்ரெண்டிங் செய்திகள்

ஒவ்வொரு காலத்திலும் கிரகங்கள், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மற்றொரு ராசியில் சஞ்சரிக்கிறது. மகரத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்வதால் சில ராசியினர், செல்வ வளத்தைப் பெறுகின்றனர். அந்த ராசிகள் குறித்துப் பார்க்கலாம்.

மேஷம்: இந்த ராசிக்கு, இது நன்மை கிடைக்கும் தருணம் ஆகும். வெகுநாட்களாக தடைபட்ட திருமணம், உங்கள் நல்ல மனதுக்கு ஏற்ப நல்லபடியாக அமையும். உங்கள் வாழ்க்கைத்துணையும் குணமிக்கவர்களாக அமைவர். இத்தனை ஆண்டுகளாக கிடைக்காத அன்பு கிடைக்கும். மேஷ ராசியினரிடம் தைரியமும் விவேகமும் நிரம்பி இருக்கும். இது வெற்றியை நோக்கி நம்மை இட்டுச் செல்லும்.

கன்னி: இந்த ராசியினருக்கு, திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கைத்துணையின் அன்பால் நெகிழ்வீர்கள். வெகுநாட்களாக வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். தொழிலில் வெற்றிபெறுவீர்கள்.

மகரம்: இந்த ராசியினருக்கு, இந்த தருணத்தில் வெகுநாள் ஆசை நிறைவேறும். இக்கால கட்டத்தில் பிரிந்த காதல் ஜோடிகள் ஒன்றுசேர்வர். சண்டை சச்சரவுகளால் பிரிந்துவாழும் மகர ராசியினர் சேர்ந்து வாழ்வர். வெகுநாட்களாக வாங்க நினைத்த பொருட்களை எல்லாம் வாங்குவீர்கள். உங்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கும் காலகட்டம் இது.

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்