தமிழ் செய்திகள்  /  Astrology  /  Signs That Will Get Rid Of Suffering And Find Happiness Due To The Transit Of Lord Venus In Pisces

Happiness Signs: மீன ராசியில் சுக்கிரபகவானின் பெயர்வு.. துன்பம்நீங்கி இன்பம்காணப்போகும் ராசிகள்!

Marimuthu M HT Tamil
Mar 19, 2024 06:11 PM IST

Happiness Signs: மீனத்தில் சஞ்சரிக்கப்போகும் சுக்கிர பகவானால் நல்வாய்ப்பினைப் பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

மீனம்
மீனம்

ட்ரெண்டிங் செய்திகள்

வரும் மார்ச் 31ஆம் தேதி சுக்கிர பகவான், 12 ராசிகளில் இறுதியாகும் இருக்கும் மீன ராசியில் பயணப் படப்போகிறார். கடைசி ராசியில் சுக்கிர பகவான் சஞ்சரிப்பது சுபத்தைத் தரக்கூடியது. இதனால் வரக்கூடிய ஏப்ரல் மாதத்தில் சில ராசியினர் பெரியளவில் நன்மைகளை, நல்ல வாய்ப்புகளை அறுவடைசெய்யப்போகின்றனர்.

சுக்கிர பகவானின் இந்த புலப்பெயர்ச்சியால் தடைபட்ட திருமணம் சரியாகும். கைவிடப்பட்ட காதல் கைகூடும். கணவன் - மனைவி இடையே இருந்த அந்நியோன்யம் பிரச்னைகள் தீரும். மனநிம்மதி கிட்டப்போகும். சுக்கிரனின் சஞ்சாரத்தால் நல்வாய்ப்பினைப் பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

மிதுனம்: மீன ராசியில் சுக்கிர பகவானின் புலப்பெயர்ச்சியால், நல் வாய்ப்பினைப் பெறப்போகும் ராசிகளில் முக்கியமானது, மிதுனம். இந்த ராசியினருக்கு வெகுநாட்களாக கிடைக்காமல் இருந்த பணிமூப்பு கிடைக்கும். ஊதிய உயர்வு அதிகம் ஆகும். வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக அடுத்த படிநிலையினைப் பெறுவார்கள். வங்கியில் சேமிப்புக் கணக்கில், பணத்தை அதிகம் சேமிக்கும் பழக்கம் உண்டாகும். தொழில் முனைவோருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வெளிமாநிலத்தில் இருந்தும் ஆர்டர்கள் குறையும். காண்டிராக்டர்களுக்கு தொழிலாளிகள் விசுவாசிகளாக இருப்பர். தடைபட்ட பணப்பட்டுவாடா சரியாகும். இத்தனை நாட்களாக கஷ்டத்தின் உச்சியில் இருந்த மிதுனராசியினருக்கு, சரியான வேலைஇல்லாமல் உழன்றவர்களுக்கு நிச்சயம் தகுதிக்கு ஏற்ப நல்ல சம்பளத்தில் பணி கிடைக்கும். ஆடை, மற்றும் ஒப்பனைப்பொருட்கள் விற்கும் கடையினருக்கும், அதுசார்ந்த தொழில் புரிபவர்களுக்கு லாபம் இரட்டிப்பு கிடைக்கும்.

கடகம்: மீன ராசியில் சுக்கிர பகவானின் புலப்பெயர்ச்சியால், நல் வாய்ப்பினைப் பெறப்போகும் ராசிகளில் முக்கியமானது, கடகம். இந்த ராசியினருக்கு சுக்கிர பகவானின் சேர்க்கையால், இத்தனை நாட்களாக தொழிலில் இருந்த சுணக்கம் மாறி லாபம் பெறுவீர்கள். துணிக்கடை வைத்திருப்பவர்களுக்கு விற்காத ஆடைகள் எல்லாம் நல்ல விலையில் விற்பனை ஆகும்.ஃபர்னிச்சர் கடை வைத்திருந்தவர்களுக்கும் இதேபோன்ற நிலைதான். பணி மற்றும் தொழில் ஸ்தானத்தில் இருந்த எதிரிகளின் தாக்கம் குறையும். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்னும் மொழிக்கு ஏற்ப அயல்நாடு சென்று பொருள் ஈட்ட முயற்சித்தால் சரியான வாய்ப்பு கிடைக்கும். கணவன் - மனைவிக்கு இடையே சுமுகமான சூழல் உண்டாகும்.

துலாம்: மீன ராசியில் சுக்கிர பகவானின் புலப்பெயர்ச்சியால், நல் வாய்ப்பினைப் பெறப்போகும் ராசிகளில் முக்கியமானது, துலாம். இந்த ராசிக்குடையவர் சுக்கிரன். ஆகையால், சுக்கிரனின் இந்த புலப்பெயர்ச்சியால் துலாமுக்கு கூடுதல் நன்மை கிடைக்கப்போகிறது. சுக்கிர பகவானின் பெயர்வால் உங்கள் சொல்லால் பல நன்மைகள் உண்டாகும். உங்களது இனிமையான பேச்சால் தொழில் வளரும். பகைவர்கள் நண்பர்கள் ஆவார்கள். கடன் வாங்கி ஏமாற்ற நினைத்தவர்கள் உங்களது பணத்தை வீடுதேடி வந்து தருவார்கள். தீரமும் தன்னம்பிக்கையும் விவேகமும் அதிகரிக்கும். இத்தனை நாட்களாக, உங்களை கிள்ளுக்கீரையாக நினைத்த உங்களது நிறுவனத்தினராலேயே பதவி உயர்வைப் பெறுவீர்கள், அதுவும் நல்ல சம்பளத்துடன். நீண்டநாட்களாக பிஹெச்டி மற்றும் எம்.ஃபில் படிக்க நினைத்தவர்கள் வரும் ஆண்டில் படிப்பீர்கள். நீண்ட நாட்களாக வரன் எதுவும் கிடைக்காமல் தடுமாறியவர்களுக்குத் திருமணம் கைகூடும்.

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்