Sun Venus Conjunction: மேஷ ராசியில் சூரியன் சுக்கிரன் சேர்க்கை.. பேஷ் பேஷ் என கம்பீரமாக வாழப்போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sun Venus Conjunction: மேஷ ராசியில் சூரியன் சுக்கிரன் சேர்க்கை.. பேஷ் பேஷ் என கம்பீரமாக வாழப்போகும் ராசிகள்

Sun Venus Conjunction: மேஷ ராசியில் சூரியன் சுக்கிரன் சேர்க்கை.. பேஷ் பேஷ் என கம்பீரமாக வாழப்போகும் ராசிகள்

Marimuthu M HT Tamil
Apr 09, 2024 03:46 PM IST

Sun Venus Conjunction:சுக்கிரன் மற்றும் சூரியன் ஆகிய இரு பெரும் கிரகங்கள் ஒன்று சேர்வதால் உண்டாகும் நன்மைகள் குறித்துப் பார்ப்போம்.

சுக்கிரன் மற்றும் சூரியன் சேர்க்கை
சுக்கிரன் மற்றும் சூரியன் சேர்க்கை

நவகிரகங்களின் மன்னனாக கூறப்படும் சூரிய பகவான், வரும் ஏப்ரல் 13ஆம் தேதி, மேஷ ராசிக்குப் புலம்பெயர்கிறார். அதனைத் தொடர்ந்து அசுரனின் தலைவன் சுக்கிரன் மேஷத்துக்குள் குடி புகுகிறார். இதனால், மேஷத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன் ஒரே நேரத்தில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு பயணிக்கின்றனர்.

இதனால் சில ராசியினருக்கு சுக்ராதித்ய ராஜயோகம் உண்டாகிறது. இந்த சுக்ராதித்ய ராஜயோகத்தின் தாக்கத்தினால் துன்பத்தைத்தள்ளப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

துலாம்: துலாம் ராசியின் 7ஆம் இல்லத்தில், இந்த யோகம் வேலை செய்கிறது. இந்த நேரத்தில் துலாம் ராசியினருக்கு நீண்டநாட்களாக இருந்த திருமணத்தடை நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வெகுநாட்களாக முயன்று தட்டிப்போய் கொண்டே இருந்த விஷயங்கள் இனிமேல் கை வந்துசேரும். புதிய தொழில் தொடங்கவேண்டும் என்று நினைத்தால் இக்காலத்தில் தொழிலில் நன்கு பரீட்சயமான ஒருவரின், பார்ட்னர்ஷிப்புடன் தொடங்குங்கள். கடும் அலைச்சலிலும் தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். வெகுநாட்களாக உங்களை ஏமாத்தி வந்த நண்பர்கள் மனம்மாறுவார்கள். உங்களிடம் கடன்பெற்று தராமல் இழுத்தடித்தவர்கள், மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு, உங்களிடம் வந்து பணத்தை ஒப்படைத்துச் செல்வர். அலுவலகத்தில் பயந்து பயந்து செயல்பட்ட நாட்கள் மாறி, தைரியத்துடன் செயல்படும் காலம் உங்களுக்கு வந்து விட்டது. 

சிம்மம்: சிம்ம ராசியின் 9ஆம் இல்லத்தில், சுக்கிரனும் சூரியனும் இணைந்து உண்டாகும் சுக்ராதித்ய யோகம் உண்டாகியுள்ளது. இதனால் அடிமேல் அடி விழுந்து கீழே விழுந்துகிடப்பவர்களுக்கு இக்காலம் எழுந்து நடக்கும் காலம். உங்களை வேண்டாம் எண்று ஒதுக்கிய சொந்தங்கள், உங்களது நல்ல மனதை உணர்ந்து, மீண்டும் வந்து சேர்வர். பணியிடத்தில் புரோமோஷன் தாமதம் ஆகிக்கொண்டே இருக்கும் சிம்ம ராசியினருக்கு, இக்கால கட்டத்தில் புரோமோசன் பற்றிய பேச்சுகள் அதிகரிக்கும். மேலும் உங்களது செயல்திறனைப் பாராட்டி, நிறுவனத்தால் ஊக்கத் தொகை கூட வழங்கப்படலாம். கடும் மன உளைச்சலில் உங்கள் குடும்பம் இருந்தாலும், உங்களது நிதானமான குணத்தால் பாஸிட்டிவாகப் பேசி, குடும்பத்திலுள்ளவரைத் தேற்றுவீர்கள். அயல்நாடு செல்ல முயற்சிப்பவர்கள் இந்த காலகட்டத்தில் கடுமையாகப் படித்து, அறிவைப் பெற்றால் வெளிநாடு போகும் வாய்ப்பு உண்டாகும். உடலில் சூட்டின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அருவிகளில் சென்று குளிப்பீர்கள். படித்து அரசுத்தேர்வு எழுதும் மாணவர்கள், நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி வாய்ப்பினைப் பெறுவீர்கள்.நினைவாற்றல் திறன் அதிகரிக்கும். 

மேஷம்: இந்த ராசியில் தான், சுக்கிரனும் சூரியனும் இணைந்து சுக்ராதித்ய ராஜயோகத்தைப் பெறுவர். இக்காலகட்டத்தில் மேஷ ராசியினர், இதற்கு முன்பு பெற்ற கெட்டப்பெயர் எல்லாம் நீங்கி, நல்ல பெயரைப் பெறுவீர்கள். இத்தனை நாட்களாக சம்பாதித்து ஊதாரியாக செலவழித்து இருந்தீர்கள் என்றால், இக்காலத்தில் வங்கியில் சேமிப்புக் கணக்குத் தொடங்கி சேமிப்பீர்கள். குழந்தையில்லாத மேஷ ராசியினருக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். வெகுநாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்குவீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்