தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani: கஷ்டத்தில் மட்டுமல்ல சந்தோஷத்திலும் பங்கு கொடுப்பார் சனி.. விட்டதைப் பிடிக்கப்போகும் சுப ராசிகள்

Sani: கஷ்டத்தில் மட்டுமல்ல சந்தோஷத்திலும் பங்கு கொடுப்பார் சனி.. விட்டதைப் பிடிக்கப்போகும் சுப ராசிகள்

Marimuthu M HT Tamil
Jun 16, 2024 08:10 PM IST

Sani: கஷ்டத்தில் மட்டுமல்ல சந்தோஷத்திலும் பங்கு கொடுப்பார் சனி; இதனால் விட்டதைப் பிடிக்கப்போகும் சுப ராசிகள் குறித்தும் பார்ப்போம்.

Sani: கஷ்டத்தில் மட்டுமல்ல சந்தோஷத்திலும் பங்கு கொடுப்பார் சனி.. விட்டதைப் பிடிக்கப்போகும் சுப ராசிகள்
Sani: கஷ்டத்தில் மட்டுமல்ல சந்தோஷத்திலும் பங்கு கொடுப்பார் சனி.. விட்டதைப் பிடிக்கப்போகும் சுப ராசிகள்

சனி பகவானால் எந்த ராசிக்காரர்கள் ஆசீர்வதிக்கப்படப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். பல ராசிக்காரர்கள் சனி பகவானின் அருளால் லாபத்தை எட்டப் போகிறார்கள். சனியின் உதய நிலையால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

தனுசு: 

சனி பகவானின் உதயநிலையால், தனுசு ராசியினர், பல்வேறு வகையான நிதி பதற்றங்களில் இருந்து விடுபடுவர். கும்ப ராசியில் சனியின் நிலைத்தன்மை தீவிரமடைவதால், தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மை கிடைக்கும். சக ஊழியர்களின் உதவியுடன், பெண்டிங்கில் உள்ள பணிகளையும் சவால்களையும் நீங்கள் சமாளிப்பீர்கள். வெளிநாடு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். சனி பகவானால், பட்ட அவமானங்கள் நீங்கும். வம்பு, வழக்குகளில் சிக்கியிருந்தால் அதில் இருந்து விடுபடுவீர்கள். கடுமையாக உழைத்தால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். தடைபட்ட சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும். வெகுநாட்களாக நீங்கள் செய்யும் பணியில் தொய்வு இருந்தால், இந்த காலத்தில் உங்கள் நிறுவன உயர் அலுவலர்களின் நம்பிக்கையைப் பெற்று சாதிப்பீர்கள்.

துலாம்: 

சனியின் அருள் துலாம் ராசிக்காரர்கள் மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த பணி, தற்போது நிறைவடைய உள்ளது. செல்வத்திற்கும் வலுவான தொடர்பு இருக்கப்போகிறது. அமைதியும் மகிழ்ச்சியும் துலாம் ராசியினருக்குத் திரும்பக் கூடும். சனியின் சுப தாக்கத்தால், தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணி சார்பாக, வேறு ஒரு இடத்தில் பணிபுரிந்தவர்கள், இந்த காலத்தில் குடும்பத்துடன் ஒன்று சேர்வார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிரிந்த தம்பதிகள் ஒன்றுசேர்வர்.

ரிஷபம்: 

கும்பத்தில் சனியின் நிலை காரணமாக, பல ராசிக்காரர்கள் லாபம் பெறப் போகிறார்கள். இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்கள் வருமானத்தின் அடிப்படையில் பெரும் லாபம் பெறுவார்கள். போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். ஒரு நண்பரின் உதவியுடன், நீங்கள் பெரும் லாபம் பெறுவீர்கள். தொழில் தொடங்க வாய்ப்பு உருவாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வந்துசேரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

டாபிக்ஸ்