Lord Mercury: புதன் ஆட்டிப் படைக்கப்போகிறார்.. கெட்ட நேரம் வருது.. சூதானமாக இருக்கவேண்டிய ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mercury: புதன் ஆட்டிப் படைக்கப்போகிறார்.. கெட்ட நேரம் வருது.. சூதானமாக இருக்கவேண்டிய ராசிகள்

Lord Mercury: புதன் ஆட்டிப் படைக்கப்போகிறார்.. கெட்ட நேரம் வருது.. சூதானமாக இருக்கவேண்டிய ராசிகள்

Marimuthu M HT Tamil Published Jun 14, 2024 02:52 PM IST
Marimuthu M HT Tamil
Published Jun 14, 2024 02:52 PM IST

Lord Mercury: மிதுன ராசியில் புதன் பகவான் பெயர்ச்சியாகி ஆட்டிப் படைக்கப் போகிறார். கெட்டநேரம் வருவதால் பார்த்து சூதானமாக இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.

Lord Mercury: புதன் ஆட்டிப் படைக்கப்போகிறார்.. கெட்ட நேரம் வருது.. சூதானமாக இருக்கவேண்டிய ராசிகள்
Lord Mercury: புதன் ஆட்டிப் படைக்கப்போகிறார்.. கெட்ட நேரம் வருது.. சூதானமாக இருக்கவேண்டிய ராசிகள்

இது போன்ற போட்டோக்கள்

ஜோதிட சாஸ்திரப்படி, புதன் பகவான் ஜூன் 14ஆம் தேதி மிதுன ராசியில் இரவு 10:55 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு ஜூன் 29ஆம் தேதி வரை சஞ்சரிப்பார்.

புதன், பொதுவாகவே நன்மை தரக் கூடிய பேச்சு மற்றும் புத்திசாலித்தனம் ஆகிய இரண்டின் காரணகர்த்தாவாக விளங்கக் கூடியவர். இது சில ராசியினருக்குத் தொழிலில் சிக்கலை உண்டாக்கச் செய்கிறது.

மேலும் புதன் பகவான், மிதுன ராசிக்குள் செல்வதால், அங்கு உண்டாகும் புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் சில ராசியினருக்கு, லட்சுமி நாராயண யோகம் ஏற்பட்டு கெடு பலன்களைக் கொடுக்கிறது.

தொழிலில் பிரச்னையைச் சந்திக்கப் போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

விருச்சிகம்: 

புதன் பகவான், விருச்சிக ராசியினரின் எட்டாம் இல்லத்தில் பெயர்ச்சி ஆகிறார். இதனால் விருச்சிக ராசியினருக்கு பணியிடத்தில் அழுத்தம் அதிகரிக்கும். உங்களது கடினமான முயற்சிகள், மாற்றியோசிக்கும் ஃபார்முலாக்கள் ஆகியவையும் ஒர்க் அவுட் ஆகாது. மனதளவில் மிகவும் நொடிந்து போயிருப்பீர். உங்கள் மீதான பிடிப்பு குறைந்து போயிருக்கும். சுப செலவுகள் செய்ய ஏற்றக் காலம். எனவே, இந்த காலத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். 

கும்பம்: 

புதனின் பெயர்ச்சி கும்ப ராசியினரின் ஐந்தாம் இல்லத்தில் நடைபெறுகிறது. இந்த தருணத்தில், கும்ப ராசியினருக்கான சீரான வளர்ச்சி தடைபடும். தொழிலில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய லாபம் இருக்காது. அவர்கள் பணியிடத்தில் சகப் போட்டியாளர்களிடம் நெருக்கடியைச் சந்திக்கலாம். தூக்கம் சரிவர வராது. குடும்பத்தில் குழப்பமான சூழல் அதிகரித்து, கவலைகள் கூடும். புதனின் பெயர்ச்சியால் உங்களிடம் கடன் பெற்றவர்கள் தராமல் இழுத்தடிப்பார்கள். 

மகரம்:

 புதனின் பெயர்ச்சியால் மகர ராசியினருக்கு செலவுகள் வெகுவாகக் கூடும். உங்களது குத்தலான பேச்சுக்களைத் தவிர்த்துக் கொள்ளவும். இல்லையென்றால், புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் எச்சரிக்கையாக இருக்கவும். தொழிலில் புதிய எதிரிகள் உருவாகுவர். கடன் வாங்கி செலவு செய்தால் சிக்கலில் மாட்டுவீர்கள். சுப காரியத்தில் தடை ஏற்படலாம். இல்லையேல், சுப காரியம் நடத்தும்போது உறவுகளால் பிரச்னை வரலாம். 

மீனம்:

மீன ராசியினரின் நான்காம் இல்லத்தில் புதனின் பெயர்ச்சி உண்டாகிறது. இந்த காலத்தில் மிதுன ராசியினருக்கு போட்டியாளர்களால் சிக்கல் உண்டாகலாம். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களே, உங்களது வளர்ச்சி பிடிக்காமல் கெடுதல் செய்யக் கூடும். விரயச் செலவுகள் அதிகரிக்கலாம். சகோதர்கள் வழியில் சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். மனதில் நிம்மதி இருக்காது. இதனால் பணியில் சுணக்கம், பணியில் பின்னடைவு உண்டாகலாம். கடுமையான உழைத்தால் மட்டுமே நஷ்டம் ஏற்படாது. 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.