தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Mercury: மேஷ ராசியை கட்டிப்பிடித்த புதன் பகவான்.. கெடுபலன்களைச் சந்திக்கப்போகும் ராசிகள்

Lord Mercury: மேஷ ராசியை கட்டிப்பிடித்த புதன் பகவான்.. கெடுபலன்களைச் சந்திக்கப்போகும் ராசிகள்

May 10, 2024 08:57 PM IST Marimuthu M
May 10, 2024 08:57 PM , IST

  • Lord Mercury: ஜோதிடத்தின்படி, மேஷ ராசியில் புதன் பகவான் நுழைவதால் கெடுபலன்களைச் சந்திக்கப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Lord Mercury: புதன் பகவான், நவகிரகங்களின் "இளவரசன்" என்று அழைக்கப்படுகிறார். ஒருவர் லாவகமாக சரியான புள்ளி விவரங்களுடன் பேசும் திறனையும், பகுத்தறிந்து தீர்வுகளை வழங்கும் திறனையும் புதன் பகவான் வழங்குகின்றார். புதன் பகவானின் ஆளுகைக்கு உட்பட்டவர்களுக்கு காமெடி சென்ஸ் அதிகமாக இருக்கும். எந்த ஒரு வேலையையும் மிகவும் டெடிக்கேட்டிவ் ஆக செய்து முடிக்க உதவுபவர், புதன் பகவான். அத்தகைய புதன் பகவான் இன்று மே 10ல் மாலை 18:39 மணிக்கு மேஷ ராசிக்குள் நுழைந்தார். மேஷம், செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது. இது புதனுக்கு நட்பு கிரகம் அல்ல. இதனால் சில எதிர்மறையான மாற்றங்கள் உண்டாகின்றன.மேஷ ராசியில் புதன் பகவான் குடி புகுவதால், அமைதியற்ற சூழல் உண்டாகும். எவ்வாறாயினும், ஒத்துழைப்பு, சமரசம் மற்றும் உணர்திறன் ஆகியவற்றைச் சொல்லமுடியாமல் சிக்கலாக மாறும். மேஷ ராசியில், புதன் பகவான் சஞ்சரிக்கும்போது நமது எண்ணங்கள் தைரியமாக மாறும். ஆனால், நமது புத்திச்சாலித்தனமான எண்ணங்கள் தோன்றியவுடன் மறைந்துவிடும். மேஷ ராசியில், புதன் பகவானின் சஞ்சாரத்தால் சில ராசியினர் கெடு பலன்களைச் சந்திக்கப் போகின்றனர். அவை குறித்துப் பார்ப்போம்.

(1 / 7)

மேஷம்: இந்த ராசியில், புதன் நுழைந்திருப்பதால், உங்களுக்கு அநாவசியமான செலவுகள் கூடும். தேவையற்ற கடன் கூட வாங்க நேரிடும். தொழில் செய்யும் மேஷ ராசியினருக்கு, தொழிலில் சுணக்கமான தன்மை இருக்கும். கையில் பணப்போக்குவரத்து குறைந்து வறட்சியான சூழல் உண்டாகும். இதனால் சற்று பொருளதாரச் சிக்கல் உண்டாகலாம்.

(2 / 7)

ரிஷபம்: புதன் பகவான், மேஷ ராசியில் சஞ்சரிப்பதால், ரிஷப ராசியினருக்கு இக்கட்டான சூழலே ஏற்படும். இக்காலத்தில் பணி செய்யுமிடத்தில் சகப் பணியாளர்கள் மூலம் தேவையற்ற மனஸ்தாபம் உண்டாகும். இந்த காலகட்டத்தில் ரிஷப ராசியினர், யாருக்கும் முன் ஜாமீன் கையெழுத்துபோடக் கூடாது. பணம் கடன் கொடுக்கக் கூடாது. தொழிலிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகள் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால், நஷ்டத்தைச் சந்திக்கலாம்.

(3 / 7)

கன்னி: மேஷ ராசியில் புதன் பகவான் சஞ்சரிப்பதாலும், கன்னி ராசியின் 8ஆம் வீட்டில் இருப்பதாலும், வேலைப்பளு அதிகரிக்கும். பணியிடத்தில் மனப் பதற்றம் உண்டாகும். குடும்பத்தினருக்கு தேவைக்காக அடுத்தவரின் உதவியை நாடவேண்டியிருக்கும்.

(4 / 7)

விருச்சிகம்: இந்த ராசியினருக்கு, புதன் பகவான் மேஷ ராசியில் புலம்பெயர்வதால், பொருளாதாரச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். என்னதான் கஷ்டப்பட்டு தொழில் செய்தாலும் நஷ்டத்தைச் சந்திப்பீர்கள். பணியிடத்தில் நடக்கும் அரசியலால் நிலைகுலைவீர்கள். கடன் பெறும் சூழல் உண்டாகும்.

(5 / 7)

கும்பம்: இந்த ராசியினருக்கு, புதனின் பெயர்ச்சியால் பல்வேறு பிரச்னைகள் உண்டாகலாம். இந்த காலத்தில் வீண்விரயச் செலவுகள் உண்டாகும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படும்.

(6 / 7)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்