MERCURY-நேரடியாக கோதாவில் குதிக்கும் புதன் பகவான்.. கடகத்தில் ஏறியதால் அதிர்ஷ்டம்பெறும் 3 ராசிகள்
MERCURY-நேரடியாக கோதாவில் குதிக்கும் புதன் பகவான்.. கடகத்தில் ஏறியதால் அதிர்ஷ்டம்பெறும் 3 ராசிகள் குறித்துக் காண்போம்.
MERCURY: வேத ஜோதிடத்தில், கிரகங்கள் பின்னோக்கி சென்று நேராக நகரும் நிகழ்வு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது 12 ராசிகளைக் கொண்டு இருக்கும் பொதுமக்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது.
இந்து நாட்காட்டியின்படி, ஆகஸ்ட் மாதத்தில், கிரகங்களின் இளவரசனான புதன் பகவான் பிற்போக்காக நகர்கிறது. சில நாட்களில், புதன் கிரகம் அதன் இயக்கத்தை மாற்றப் போகிறது.
கடந்த ஆகஸ்ட் 5 முதல், பிற்போக்காக நகரும் புதன் சுமார் 24 நாட்களுக்குப் பிறகு அதன் வேகத்தை மாற்றி, ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று அதிகாலை 02:43 மணிக்கு கடகத்தில் நேரடியாக மாறுகிறார்.
ஜோதிட கணக்குப்படி, கடக ராசியில் புதன் கிரகத்தின் நேரடி இயக்கம் சில ராசிகளின் அதிர்ஷ்டத்தைப் பிரகாசமாக்கும். அதே நேரத்தில், சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
புதன் பகவானால் அதிர்ஷ்டத்தைச் சந்திக்கப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.
புதன் பகவானால் அதிர்ஷ்டத்தைச் சந்திக்கப்போகும் ராசிகள்:
ரிஷபம்:
புதன் பகவான் நகர்ந்து ரிஷப ராசிக்காரர்களுக்கு தனது ஆசீர்வாதங்களைப் பொழிவார். உத்தியோகத்தில் இருந்த தடைகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்குப் பல பொன்னான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். பணவரவுக்கான புதிய வழிகள் உருவாகும். ஆரோக்கியம் மேம்படும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களைத் தவறாக நினைத்தவர்கள் மனம் திருந்தி, நட்பு பாராட்டுவார். வாழ்வில் இருந்து வந்த சங்கடங்கள் மறையும்.
கடகம்:
புதனின் நேரடி இயக்கம் கடக ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமான ஒன்றாகும். இந்த நேரத்தில் நீங்கள் ஒவ்வொரு பணியிலும் விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள். சொத்து தொடர்பான தகராறுகள் தீரும். ஒவ்வொரு துறையிலும் மகத்தான வெற்றியை அடைவீர்கள். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்னைகள் நீங்கும். பேச்சில் சாந்தம் இருக்கும். வாழ்க்கைத்துணைக்கு அன்பும் ஆதரவும் கிடைக்கும். புதிய காரியங்களைத் தொடங்குவதற்கு நல்ல யோகம் உண்டாகும். உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். செயல்பாட்டில் நிதானமும் தேவை.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் மிகப்பெரிய நன்மைகளைத் தருவார். வாழ்க்கையில் ஏராளமான ஆற்றலும் உற்சாகமும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரச் சூழ்நிலை வலுவாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த தொல்லைகள் முடிவுக்கு வரும். தொழிலில் மகத்தான வெற்றியை அடைவீர்கள். உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து நிறைய அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உங்களைத் தவறாக நினைத்தவர்கள் மனம் திருந்தி, நட்பு பாராட்டுவார்.
பொறுப்பு துறப்பு-
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்