Ketu - Sun: ஒன்றாக கைகுலுக்கப்போகும் சூரியனும் கேதுவும்.. ஓஹோவென வாழப்போகும் ராசிகள்-signs blessed by ketu and lord sun conjoined in virgo - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ketu - Sun: ஒன்றாக கைகுலுக்கப்போகும் சூரியனும் கேதுவும்.. ஓஹோவென வாழப்போகும் ராசிகள்

Ketu - Sun: ஒன்றாக கைகுலுக்கப்போகும் சூரியனும் கேதுவும்.. ஓஹோவென வாழப்போகும் ராசிகள்

Marimuthu M HT Tamil
Aug 31, 2024 02:04 PM IST

Ketu - Sun: ஒன்றாக கைகுலுக்கப்போகும் சூரியனும் கேதுவும்.. ஓஹோவென வாழப்போகும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

Ketu - Sun: ஒன்றாக கைகுலுக்கப்போகும் சூரியனும் கேதுவும்.. ஓஹோவென வாழப்போகும் ராசிகள்
Ketu - Sun: ஒன்றாக கைகுலுக்கப்போகும் சூரியனும் கேதுவும்.. ஓஹோவென வாழப்போகும் ராசிகள்

இந்த நிகழ்வு, 18ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் அபூர்வ நிகழ்வாகும். இந்த கிரண்டு கிரகங்களின் சேர்க்கை சில ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தருகிறது. 

நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும் சூரிய பகவான் மற்றும் கேது பகவான்: 

ஜோதிடத்தில் சூரியக் கடவுள் ஆன்மா, தைரியம் ஆகியவற்றைத் தரக்கூடியவர். இந்நிலையில் கேது பகவான், ஜோதிடத்தில், ஜட வாழ்வில் இருந்து மக்களை விலக்கி ஆன்மிகத்திற்கு அழைத்துச் செல்லும் நிழல் கிரகமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், கேது ஒரு கிரகமாக கருதப்படவில்லை. 

சூரிய பகவான் மற்றும் கேதுவின் இணைவு சில ராசியினருக்கு அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. அப்படி அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துப் பார்போம். 

ரிஷபம்:

சூரியன் மற்றும் கேது பகவானின் சேர்க்கை ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் . அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் இந்த இணைவின் மூலம் நன்மையைப் பெறுவார்கள். ரிஷப ராசியினருக்கு, பணியிடத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். ஊதியமும் அதிகரிக்க வாய்ப்புண்டு. ரிஷப ராசியினர், தங்கள் பணியிடத்தில் தன் முயற்சியால் நற்பெயரைப்பெறுவர். சக ஊழியர்கள், மேலதிகாரிகளின் ஆதரவுகிட்டும். வெகுநாட்களாக கிடைக்காமல் இழுபறியாக இருந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கும். 

சிம்மம்:

சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கையால், சிம்ம ராசியினருக்கு வருவாய் கூடும். 

தொழில் செய்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களால் வருவாய் அதிகரிக்கும். இதனால் கடன்பட்ட சிம்மராசியினர், அதில் இருந்துவிடுபடுவர். 

வெகுநாட்களாக முடிவுறாத பணிகள் முடிவடையும். ஒட்டு மொத்தமாக இந்த காலகட்டத்தில், சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை காரணமாக சிம்ம ராசியினருக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். 

மேஷம்:

சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கையினால், மேஷ ராசியினர் தொழிலில் பெரிய வெற்றியைப் பெறுவார்கள். பணியில் இல்லாதவர்கள் இந்த காலத்தில் மீண்டும் முயற்சி செய்து பார்த்தால், நல்ல வேலையைப் பெறுவார்கள். வெகுநாட்களாக, நமக்கு கிடைக்காமல் இருந்த தொழில் வாய்ப்புகள் நம் கையில் லட்டுபோல் கிட்டும். இந்த காலத்தில் கடை வைத்திருப்பவர்கள் வேறு ஒரு கடையை வைப்பார்கள். இந்த சமயத்தில் நல்ல நிதி ஆதாயத்தை மேஷ ராசியினர் பெறக்கூடும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் கேதுவின் இணைவு பெரிய நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள் . முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படும். உங்கள் முன்னேற்றத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் தடைகள் நீங்கும். வணிக நபர்களுக்கு, இது ஒரு இலாபகரமான நேரம் ஆகும். பணியிடத்தில் ஒருவரின் மரியாதை கணிசமாக அதிகரிக்கிறது. சமூகத்தில் அவர்களின் மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்ப வாழ்க்கையில், மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்