Siddargal Ragasiyam: உங்கள் வாழ்க்கையில் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டுமா?- சித்தர்கள் சொன்ன சூட்சும வழி!
கடகத்துக்கு சந்திரப பகவான். சந்திர பகவானுடைய அதிதேவதை அம்மன். அலங்காரமாக இருக்கிற எல்லா அம்மனும். அம்மனுக்கான மரம் என்ன புரசு.
சித்தர்கள் சூட்சுமமான முறையில் பல பூஜைகளை நமக்காக உருவாக்கித் தந்திருக்கின்றனர். தாந்திரீக முறையில் சித்தர்கள் அதுபோன்ற பூஜைகளை அருளியிருக்கின்றனர்.
ராசி என்பது உயிர். லக்கினம் என்பது உடல். நமது வாழ்க்கையில் இன்னல்களும் இருக்கின்றன. சந்தோஷங்களும் நிறைந்திருக்கின்றன.
கடகத்துக்கு சந்திரப பகவான். சந்திரபகவானுடைய அதிதேவதை அம்மன். அலங்காரமாக இருக்கிற எல்லா அம்மனும். அம்மனுக்கான மரம் என்ன புரசு.
சந்திரபகவானுக்கு உகந்த ஒரு செடி புரசு. நீங்கள் பிறந்த கிழமையில் புரசு செடியை ஒரு தொட்டியில் வைத்து வளர்க்கத் தொடங்குங்கள். மஞ்சள்-குங்குமம் வைத்து வழிபடுங்கள்.
15 முறை சந்திரபகவானே நமஹ என சொல்லுங்கள். செடி வைத்த 15 நாட்களுக்குப் பிறகு பிறந்த நட்சத்திர நாளன்று அந்தச் செடியை எடுத்துக் கொண்டு உங்கள் குல தெய்வம் கோயிலுக்கு செல்லுங்கள். அந்தக் கோயிலில் 15 நிமிடங்கள் அமைதியாக இருந்து கோயிலின் நந்தவனத்தில் அந்தச் செடியை நட்டு வைத்து விட்டு வாருங்கள்.
எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் சென்று நீர் ஊற்றி விட்டு வாருங்கள்.
அந்தச் செடி வளர வளர உங்கள் வாழ்க்கையும் வளர்ச்சி பெறும்.
உங்கள் குலதெய்வம் கோயிலுக்குச் செல்ல முடியாவிட்டாலும் கூட உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று 15 நிமிடங்கள் அமைதியாக இருங்கள். பின்னர், அந்தச் செடியை அந்தக் கோயிலுக்கு அருகில் கூட நடலாம்.
பாதுகாப்பையும் ஏற்படுத்துங்கள். தினமும் நீர் ஊற்றிவிட்டு வாருங்கள். இதுவும் முடியவில்லை என்றால் நீங்கள் வீட்டிலேயே கூட அந்தச் செடியை வளர்க்கலாம்.
நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். அந்தச் செடியிடம் என்ன வரம் வேண்டுமானாலும் கேளுங்கள். பிரபஞ்சத்துடன் அந்தச் செடி இணைந்திருக்கும்.
அதனால் நீங்கள் கேட்ட வரம் இருக்கும். இப்படி செய்தும் உங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்றால் ஜாதகத்தில் சில கட்டங்களை பொருத்து பலன்கள் மாறுபடும்.
பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம். ஆனால், இதை நீங்கள் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். கடக ராசியின் அதிபதி சந்திர பகவான்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்