Shani Retrograde: கும்பத்தில் பின்நோக்கி செல்லும் சனி பகவான்..! 2025 மார்ச் முதல் பொருளதார முன்னேற்றம் பெறும் ராசிகள்
Shani Retrograde:கும்பத்தில் பின்நோக்கி செல்லும் சனி பகவான், மீன ராசிக்குள் நுழைகிறார். இதன் விளைவாக 2025 மார்ச் முதல் பொருளதார முன்னேற்றம் பெறும் ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்
சனி பகவான் தனது ராசி அதிபதியான கும்ப ராசிக்கு மாறுகிறார். கும்பத்தில் இருந்து சனி விலகுவது மூன்று ராசிக்காரர்களுக்கும் மிகவும் சுப பலன்களை தரும். கும்பத்தில் இருந்து சனி விலகும் போது எந்தெந்த ராசிக்காரர்கள் நன்மை நன்மை பெற போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
சனி பகவான்
நவகிரகங்களில் நீதிமனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர் சனி பகவான். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
ர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
கும்பத்தில் பிற்போக்காக பயணிக்கும் சனி
ஜோதிடத்தின் படி, கும்பம் 11வது ராசியாக உள்ளது. கும்ப ராசியின் அதிபதியான சனி பகவான் இந்த நேரத்தில் கும்ப ராசியில் இருந்து பிற்போக்குத்தனமாக பயணிக்கிறதார். வரும் நவம்பரில் இந்த ராசியில் சஞ்சரிக்கிறார்.
2025இல் சனி கும்ப ராசியிலிருந்து விலகி மீன ராசிக்குள் நுழைகிறார். 2025, மார்ச் 29 அன்று மீன ராசியில் இடம் பெயர்கிறார். கும்பத்தில் இருந்து சனி விலகுவது மூன்று ராசிகளை நேரடியாக பாதிக்கும்.
இந்த ராசிக்காரர்கள் பொருளாதார முன்னேற்றத்துடன் தொழிலிலும் வெற்றி பெறுவார்கள். கும்பத்தில் இருந்து சனி வெளியேறுவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்
கும்பத்தில் இருந்து சனி எப்போது விலகுகிறார்
வரும் 2025 மார்ச் மாதம் 29ஆம் தேதி, சனிக்கிழமை காலை 11:01 மணிக்கு சனி பகவான் மீன ராசியில் நுழைகிறார். இதன் விளைவாக மகரம், கடகம், விருச்சிகம் ராசியினர் பல நன்மைகள் பெறுவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடக்கிறது. கும்பத்தில் இருந்து சனி வெளியேறுவது மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை வருடங்களில் இருந்து சுதந்திரம் தரும். மகர ராசிக்காரர்களுக்கு சனியின் விலகல் பொருளாதார முன்னேற்றத்தை தரும்.
உங்கள் தொழிலில் புதிய அடையாளத்தை உருவாக்கி, வெற்றியும் பெறுவீர்கள். தேவைப்படும் விஷயங்கள் கிடைக்கும். பாதியில் நிறுத்தப்பட்ட வேலைகள் மீண்டும் தொடங்கும்.
கடகம்
சனியின் நேரடி தாக்கத்தை பெறும் ராசிகளில் ஒன்றாக கடகம் உள்ளது. கும்பத்தில் இருந்து சனி பகவான் விலகியவுடன், கடக ராசிக்காரர்கள் சனியின் தாக்கத்தில் இருந்து விலகுவார்கள். மீனத்தில் சனியின் சஞ்சாரம் கடக ராசிக்காரர்களுக்கு தொழிலில் புதிய உச்சத்தை தரும். நிதித்துறையில் வெற்றி கிடைக்கும். சில நல்ல செய்திகள் தேடி வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு தற்போது சனி பெயர்ச்சியில் இருந்து வருகிறார்கள். மீன ராசிக்கு சனி சஞ்சரிப்பதால் விருச்சிக ராசியினரின் பொருளாதார நிலை மேம்படும்.
மன அமைதி பெறுவீர்கள். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். குழந்தை மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றைத் முழுமையாக நம்புவதற்கு முன், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்