தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Magaram Rasipalan: பணத்தை மூட்டை கட்ட ரெடியா! மகரத்திற்கு அடிக்கிறது யோகம்! அடுத்த 96 நாள் வேற லெவல்! சனி வக்ர பலன்!

Magaram Rasipalan: பணத்தை மூட்டை கட்ட ரெடியா! மகரத்திற்கு அடிக்கிறது யோகம்! அடுத்த 96 நாள் வேற லெவல்! சனி வக்ர பலன்!

Kathiravan V HT Tamil
Jul 04, 2024 04:39 PM IST

Magaram Rasipalan: அடுத்த 43 நாட்கள் மகரம் ராசிக்கு மிக முக்கியமானது. ராகு பகவானின் நட்சத்திரமான சதயத்தில் சனி பகவானும், ராகு பகவான் சனியின் நட்சத்திலும் உள்ளனர். இதனால் பணம், வெற்றி ஆகியவற்றை குவிக்கும் நேரமாக அமையும்.

Magaram Rasipalan: பணத்தை மூட்டை கட்ட ரெடியா! மகரத்திற்கு அடிக்கிறது யோகம்! அடுத்த 96 நாள் வேற லெவல்! சனி வக்ர பலன்!
Magaram Rasipalan: பணத்தை மூட்டை கட்ட ரெடியா! மகரத்திற்கு அடிக்கிறது யோகம்! அடுத்த 96 நாள் வேற லெவல்! சனி வக்ர பலன்!

கடந்த ஜூன் 29ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை 139 நாட்களுக்கு சனி பகவான் வக்ரம் பெறுகின்றார். பாத சனி பாதிப்பில் உள்ள மகரம் ராசிக்கு அடுத்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று ஏழரை சனி நிறைவடைகின்றது. 

வெற்றிகளை தரும் குரு பார்வை 

மகரம் லக்னத்திற்கு 3க்கும் 12க்கும் அதிபதியான குரு பகவான் தற்போது 5ஆம் வீட்டில் உள்ளார். அவர் பாக்கிய ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும், உங்கள் ராசியையும் பார்க்கின்றார். 

இதனால் உங்கள் உடலும், மனதும் சீராக இயங்கத் தொடங்கும். கடவுள் ஆசீர்வாதம் பெறுவதால் செல்வம், செல்வாக்கு, குடும்ப அந்தஸ்து, மரியாதை உயரும். 

அடுத்த 96 நாட்கள் 

நீங்கள் சொல்லும் வாக்குகள் பலிக்கும், நிறைய பணம் கிடைக்கும், நினைத்த காரியத்தை முடிக்க இயலும், பெறுத்த வெற்றியை நோக்கிய பயணம் வரும் 96 நாட்களில் கிடைக்கும். 

இந்த நேரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும், எடுக்கும் முடிவுகளில் வெற்றி பெறுவீர்கள், வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும், வண்டி, வாகனம், சொத்துக்கள் சேரும். தொழிலில் புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். ஆயுள் பலம் பெறும், தொழில் மூலம் கிடைக்கும் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். 

குரு மங்கள யோகம் 

ஜூலை 12ஆம் ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சி ஏற்படுவதால், ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை குரு மங்கள யோகம் உண்டாகின்றது.

வரும் 96 நாட்களில் புதிய தொழில் தொடங்கி லாபம் அடையலாம். கடன் வாங்கலாம், கடன் கொடுக்கலாம். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் தொடங்கலாம்.  

குறிப்பாக அடுத்த 43 நாட்கள் மகரம் ராசிக்கு மிக முக்கியமானது. ராகு பகவானின் நட்சத்திரமான சதயத்தில் சனி பகவானும், ராகு பகவான் சனியின் நட்சத்திலும் உள்ளனர். இதனால் பணம், வெற்றி ஆகியவற்றை குவிக்கும் நேரமாக அமையும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து உள்ளிட்டவை இந்த நேரத்தில் உயரும். எடுக்கும் முடிவுகளில் வெற்றி பெறுவீர்கள், பயணங்கள் வெற்றியை கொடுக்கும்.  கடல் கடந்து வெற்றிகளை குவிப்பீர்கள், சமூகத்தில் மரியாதை உயரும், வித்தைகளை கற்றத் தொடங்கலாம். 

சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்ற பிறகு டிசம்பர் 27ஆம் தேதி வரை சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் இருப்பார் என்பதால் வர்கோத்தம யோகமும் இருக்கும். அடுத்து வரும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் காலங்கள் வாழ்கையில் மிகப்பெரிய பலன்களை தரும்.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-

https://twitter.com/httamilnews   

Google News: https://bit.ly/3onGqm9 

இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v