தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Magaram Rasi: ‘வக்ரம் ஆகப்போகும் சனி பகவான்! மகரம் ராசி என்ன செய்யலாம்! என்ன செய்யக்கூடாது!’

Magaram Rasi: ‘வக்ரம் ஆகப்போகும் சனி பகவான்! மகரம் ராசி என்ன செய்யலாம்! என்ன செய்யக்கூடாது!’

Kathiravan V HT Tamil
May 05, 2024 03:15 PM IST

“இதில் 2020ஆம் ஆண்டில் இருந்து 2023ஆம் ஆண்டு வரையிலான ஜென்மசனி காலகட்டம் வாழ்கையில் கடுமையான காலகட்டமாக இருந்து இருக்கும். சனி பகவான் நிறைய பாடங்களை உங்களுக்கு கொடுத்து இருப்பார்”

மகரம்
மகரம்

இதில் 2020ஆம் ஆண்டில் இருந்து 2023ஆம் ஆண்டு வரையிலான ஜென்மசனி காலகட்டம் வாழ்கையில் கடுமையான காலகட்டமாக இருந்து இருக்கும். சனி பகவான் நிறைய பாடங்களை உங்களுக்கு கொடுத்து இருப்பார். 

இப்போது மகர ராசிக்கு பாத சனி நடந்து கொண்டு இருக்கிறது. சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான கும்பராசியில் உள்ளார். இந்த பாதசனி முடியும் போது முழுமையாக ஏழரை சனி முற்றுப்பெறுகிறது. 

வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீனம் ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆவதன் மூலம் மகரம் ராசிக்கு முழுமையாக ஏழரை சனி முற்றுப்பெருகிறது. 

ஆனால் இதற்கு இடையில் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி முதல் டிசம்பர் 27 ஆம் தேதி வரையிலான மூன்று மாதம் சனி பகவான் வக்ரம் பெற்று பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து சதயம் நட்சத்திரத்திற்கு பின்னோக்கி செல்கிறார். 

வீடு, நிலம், வாகனங்கள் போன்ற விஷயங்களை சனி வக்ர காலகட்டத்தில் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. நீண்ட தூர பயணங்கள் குறிப்பாக சாகச பயணங்களை தவிர்ப்பது அவசியம். பிறருக்காக வாக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதே போல் உணவு வகைகளில் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது நல்லது.

தற்போது நடைபெற்று உள்ள குரு பெயர்ச்சி உங்கள் வாழ்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. 

என்ன செய்யலாம்

வேலை சார்ந்த புதிய முயற்சிகளை எடுப்பது நன்மைகளை பெற்றுத்தரும். நீண்டநாளாக உழைத்தும் அதற்கான அங்கீகாரம் இன்னும் மகரம் ராசிக்கு கிடைக்காத நிலை உள்ளது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய காலத்தை தவிர மீதம் உள்ள 9 மாதங்களை சரியாக பயன்படுத்திக் கொண்டால் மிகப்பெரிய நன்மைகளை பெறலாம். புதிய தொழில்களை தொடங்கலாம். ஆனால் பெரிய ரிஸ்க் எடுக்காமல், பெரிய கடன்களை வாங்காமல் தொழில் தொடங்கலாம்.  

கடந்த சில ஆண்டுகளாக தவறிய திருமண முயற்சிகள் கைகூடும். ஐந்தாம் இடத்தில் குரு உள்ளதால் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் நிற்கும். முடிந்த அளவுக்கு முயற்சி செய்தால் போதுமானது. கட்டிய வீட்டிற்கு கிரக பிரவேசம் செய்யலாம். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைத்தால் பயன்படுத்திக் கொள்ளவும்.  

நீண்ட காலத்திற்கு பின்னர் மிக சந்தோஷமாக இருக்கபோகிறீர்கள். நிறைய பேரை சந்தோஷப்படுத்துவதன் மூலம் உங்கள் வாழ்கையில் இரட்டிப்பு மகிழ்ச்சியை பெற்றுத்தரும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற் பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதில் இருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்து கொள்ள வேண்டும். மற்றபடி இதில் இருந்து பயன்படுத்தி கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel