Guru Peyarchi 2024: தன்னம்பிக்கை பிறக்கும்! மகம் நட்சத்திரனருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024: தன்னம்பிக்கை பிறக்கும்! மகம் நட்சத்திரனருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

Guru Peyarchi 2024: தன்னம்பிக்கை பிறக்கும்! மகம் நட்சத்திரனருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 19, 2024 01:30 AM IST

மகம் நட்சத்திரம் நான்கு பாதங்கள் சிம்ம ராசியில் இருந்து வரும் நிலையில், எதிர்வரும் குரு பெயர்ச்சியால் இந்த நட்சத்திரனருக்கு கிடைக்கப்போகும் நற்பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

மகம் நட்சத்திரனருக்கு குரு பெயர்ச்சி பலன்கள்
மகம் நட்சத்திரனருக்கு குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சியால் மகம் நட்சத்தினர் பெறும் பலன்கள்

சிம்ம ராசியில் இருக்கும் மகம் நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரமாக உள்ளது. இந்த நட்சத்திரனருக்கு 25 வயது வரை சுக்கிர திசை இருந்து வருகிறது. படிப்பு சார்ந்து இருந்து வந்த நெருக்கடிகள் அகலும். வேலை தோடுவோருக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். முயற்சி மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

31 வயது உள்ளவர்களுக்கு சூரிய திசை இருந்து வருகிறது. திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன் அமையும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு கேட்ட இடத்தில் உதவிகள் அமையும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பம் மேன்மை அடையும். கடன் பிரச்னைகள் தீர்வாகும்.

41 வயது வரை இருப்பவர்களுக்கு சந்திர திசை இருந்து வருகிறது. எந்த விதத்தில் கெடுதல் ஏற்படாது. வருமானங்கள் போதிய அளவில் உண்டு. வளர்ச்சியும் பெறுவீர்கள். வந்து சேர வேண்டிய பணம், பொருள் கிடைக்கும்.

48 வயது வரை உள்ளவர்களுக்கு செவ்வாய் திசை இருந்து வருகிறது. வீடு கட்டும் யோகம் உண்டு. சேமிப்புகள் இருக்கும். கடன் பிரச்னைகள் அகலும். வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் சுணக்கம் ஏற்பட்டாலும் நஷ்டம் இருக்காது

66 வயது வரை ராகு திசை இருந்து வருகிறது. எடுக்கும் முயற்சிகளில் நல்ல பலன்களை பெறுவீர்கள். தீமைகள் ஏற்படாது. யாராக இருந்தாலும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்.

82 வயது வரை உள்ளர்களுக்கு குரு திசை இருந்து வருகிறது. அனைத்து விதமான நன்மைகளையும் இந்த காலகட்டத்தில் பெறுவீர்கள். வேலை அல்லது தொழில் மாற்றம் ஏற்படும். வருமானமும் இருக்கும். உடலி நலனில் அக்கறை காட்டுங்கள். வயிறு சம்மந்தமான பிரச்னைகள் ஏற்படலாம். பூர்வீக் சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் தீர்வுக்கு வரும். தன்னம்பிக்கை துளிர் விடும் காலமாக குரு பெயர்ச்சி இருக்கும்.

பொதுப்பலன்கள்

பேச்சில் கவனமாக இருப்பது நன்மை விளைவிக்கும். முயற்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உடன் பிறப்புகள் வகையில் செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்கள் லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் நன்மை ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு பிரச்னைகள் அமையாது. எதிர்களை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுகும், அரசியலில் இருப்பவர்களும் ஏற்றம் உண்டு. தொழில் தொடங்குவதற்கு சிறந்த காலமாக உள்ளது. உடல்நிலை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தக்‌ஷினாமூர்த்தி வழிபாடு நல்ல மாற்றம் கொடுக்கும்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner