சனிப்பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு கண்ட சனி!
சனிப்பெயர்ச்சியால் சிம்ம ராசிக்கு என்ன நடக்கும் என பார்க்கலாம்.
சனி பகவான் ஏப்ரல் 29ஆம் தேதியிலிருந்து அதிசார பெயர்ச்சியாக மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் ஜூலை 11-ஆம் தேதி வரை அந்த ராசியில் சஞ்சரிப்பார்.
இவர் சஞ்சரிக்கும் இந்த நாட்களில் சில ராசிகளுக்கு நன்மையும், சில ராசிகளுக்குப் பிரச்சனையும் ஏற்படும்.
சிம்ம ராசியைப் பொறுத்தவரை ஏழாம் வீடான சமசப்தம ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்க உள்ளார். இந்த இடமானது வாழ்க்கைத் துணை தொழில் சம்பந்தப்பட்ட ஸ்தானமாகும்.
இது கண்ட சனி என்பதால் இடைவிடாத பிரச்சினைகள் உங்களைத் துரத்தி வரும், சனிப்பெயர்ச்சி கள் முடிந்தவுடன் பாதிப்புகள் குறைந்து விடும், எனவே மனம் தளராமல் இருங்கள்.
அதேபோல் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்திற்குச் செல்ல உள்ளார், கண்ட சனியின் மூலம் நீங்கள் நினைத்த செயலை செய்து முடிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக அமையும். அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் வரத் தாமதம் ஆகலாம், ஆனால் செயல் முடிந்துவிடும்.
அதனால் மனம் தளராமல் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து முடித்து விடுங்கள். தேவையான நேரத்தில் தேவையான பலன்கள் தேடிவரும், எனவே கடமையில் மட்டும் செய்யுங்கள்.
வியாபாரத்தைப் பொருத்தவரை, அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது, நிதிநிலை உயர்வதற்கான வாய்ப்பு அதிகம். தொழில், வியாபாரம் பொருத்தவரை எந்த பிரச்சனையும் இருக்காது. அதேசமயம் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது.
டாபிக்ஸ்