‘மார்ச் வரை தான் டைம்’ சனி வக்ர நிவர்த்தி.. நவ.16 முதல் விளாசப் போகும் விருச்சிக ராசியினர்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ‘மார்ச் வரை தான் டைம்’ சனி வக்ர நிவர்த்தி.. நவ.16 முதல் விளாசப் போகும் விருச்சிக ராசியினர்!

‘மார்ச் வரை தான் டைம்’ சனி வக்ர நிவர்த்தி.. நவ.16 முதல் விளாசப் போகும் விருச்சிக ராசியினர்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Nov 01, 2024 10:15 AM IST

கார்த்திகையில் ராசியின் ஆட்சியாக உங்களுக்கு சூரியன் நிற்பார், சனி பகவானின் பார்வையும் இருக்கும் என்பதால், வேலையில் நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்ப்புகள் பனி போல விலகும். புதிய தொடர்புகளால், வேலையில் மாற்றம், வேலை வாய்ப்பு கிடைக்கும்.

‘மார்ச் வரை தான் டைம்’ சனி வக்ர நிவர்த்தி.. நவ.16 முதல் விளாசப் போகும் விருச்சிக ராசியினர்!
‘மார்ச் வரை தான் டைம்’ சனி வக்ர நிவர்த்தி.. நவ.16 முதல் விளாசப் போகும் விருச்சிக ராசியினர்!

எல்லாமே வாழ்க்கையில் சரியாக போவதாக தோன்றும். அதற்கு காரணம், குருப்பார்வை உங்கள் மீது இருப்பது தான். மற்றபடி, சனி வக்கிரத்தால், நன்றாக போகும் எதுவும் நன்றாக முடிந்திருக்காது. விருச்சிகராசியை பொருத்தவரை, சனி பகவான் 4வது வீட்டில் இருந்து 10வது பார்வையாகவும், 6வது வீட்டையும் பார்த்துக் கொண்டிருந்தார் சனி. இதனால், நீங்கள் செய்யும் எல்லாமே குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது. குறை சொல்லப்பட்டீர்கள். 

தொழில் பிரச்னைகள் அனைத்தும் ஸ்வாகா!

தொழில் ஸ்தானத்தையும் அவர் பார்த்தால், கடந்த 3 மாதமாக, வேலை தொடர்பான பிரச்னைகளை சந்தித்திருப்பீர்கள். குரு பார்வை இருக்கிறது, ஆஹா.. ஓஹோ.. என்றார்களே.. இப்படி இருக்கிறதே என்று உங்களுக்கு தோன்றியிருக்கும், ஆனால், அங்கு கட்டையை கொடுத்தவர் சனி தான். ஐப்பசி மாதத்தில் சூரியன் நீச்சம் ஆனதால், பலருக்கு வேலையில் பாதிப்பு வந்திருக்கும்.  வேலையை விட்டு தூக்கியிருப்பார்கள். இப்படி தான், கடந்த 4 மாதம் போயிருக்கும். இனி, அந்த பிரச்னை எல்லாமே போய்விடும். 

நவம்பர் 16 முதல் மார்ச் வரை கொண்டாட்டம்

கார்த்திகையில் ராசியின் ஆட்சியாக உங்களுக்கு சூரியன் நிற்பார், சனி பகவானின் பார்வையும் இருக்கும் என்பதால், வேலையில் நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்ப்புகள் பனி போல விலகும். புதிய தொடர்புகளால், வேலையில் மாற்றம், வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் பலன் கிடைக்கும். இவையெல்லாமே சனி வக்கிர நிவர்த்தி ஆவதால் தான் நடக்கப் போகிறது. வீடு, வாகன பிரச்னையில் இருந்த அனைத்து சிக்கலும் நீங்கும். நவம்பர் 15க்கு மேல், எல்லாமே நல்லதா நடக்கும். 

மார்ச் 29ம் வரை தான் ட்விஸ்ட்

மார்ச் 29 ம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. அதுவரை உங்களுக்கு நடப்பதெல்லாம் நன்மை தான். அப்படியென்றால் அதற்கு பின் என்ன நடக்கும்? சுகஸ்தானத்தில் இருந்து, பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் சனி. அதன் அதிபதியான குரு, அதன் பின் மறையப் போகிறார். இதனால், கொஞ்சம் மனக்கசப்புகளை சந்திக்க நேரிடலாம். இருந்தாலும், திரும்ப குருப்பார்வை, 9 வது இடமான பாக்ய ஸ்தானத்தில் உச்சமாகப் போகிறார். இதனால், திடீர் வருமானம் வரும். பணச் சி்க்கல்கள் நீங்கும். பலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.

சனி பெயர்ச்சிக்கு முன்னும் பின்னும்

இவையெல்லாம் சனிப்பெயர்ச்சிக்கு பின்  நடப்பவை, சனி விக்ர நிவர்த்திக்குப் பின், நடக்கப் போவது உங்கள் ஆரோக்கியமான தூக்கத்திற்கான உத்திரவாதம் கிடைக்கும். நிம்மதி தரப் போகிறார், வீட்டில் மகிழ்ச்சியை தரப்போகிறார். தயங்கி, தேங்கிய காரியங்கள் எல்லாம், அடுத்த மார்ச் மாதத்திற்குள் நடந்துமுடிந்துவிடும். இடம், வீடு வாங்கும் காரியம் எல்லாம் சுபமாக நிறைவேறும். சூர்ய திசை, செவ்வாய் திசை, குரு திசை நடந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் கூடுதல் பலன் கிடைக்கும். 

Whats_app_banner

டாபிக்ஸ்