ஜான் ஏறினால் முழம் சறுக்கும் விருச்சிக ராசியினரே.. அர்த்தாஷ்டமச் சனிக்குப் பின் பேச்சில் கூடுதல் எச்சரிக்கை தேவை!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஜான் ஏறினால் முழம் சறுக்கும் விருச்சிக ராசியினரே.. அர்த்தாஷ்டமச் சனிக்குப் பின் பேச்சில் கூடுதல் எச்சரிக்கை தேவை!

ஜான் ஏறினால் முழம் சறுக்கும் விருச்சிக ராசியினரே.. அர்த்தாஷ்டமச் சனிக்குப் பின் பேச்சில் கூடுதல் எச்சரிக்கை தேவை!

Marimuthu M HT Tamil
Jan 06, 2025 03:46 PM IST

ஜான் ஏறினால் முழம் சறுக்கும் விருச்சிக ராசியினரே.. அர்த்தாஷ்டமச் சனிக்குப் பின் பேச்சில் கூடுதல் எச்சரிக்கை தேவை

ஜான் ஏறினால் முழம் சறுக்கும் விருச்சிக ராசியினரே.. அர்த்தாஷ்டமச் சனிக்குப் பின் பேச்சில் கூடுதல் எச்சரிக்கை தேவை!
ஜான் ஏறினால் முழம் சறுக்கும் விருச்சிக ராசியினரே.. அர்த்தாஷ்டமச் சனிக்குப் பின் பேச்சில் கூடுதல் எச்சரிக்கை தேவை!

அதில், ‘’ விருச்சிக ராசிக்கான ராசி அதிபதி செவ்வாய், அவர் சக உதிரக்காரகன், போர்க்காரகன், அங்காரகன் என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. இந்த ராசியாதிபதி செவ்வாயே, ஆறாம் வீட்டுக்கு அதிபதியாக வருவதுண்டு. பொதுவாக விருச்சிக ராசியினர் போல், யோகக்காரர்கள் இல்லை. பிரச்னைக்குரியவர்களும் இல்லை என்று சொல்லலாம்.

இவர்களது பலவிதமான பிரச்னைகளுக்கு இவர்களே மூல காரணமாக அமைகிறார்கள். ராசியாதிபதியே ஆறாம் வீட்டுக்கு அதிபதியாக வருவதால் இவர்களுடைய நோய், வம்பு, வழக்கு எதிரிகள் ஆகட்டும், அனைத்திற்கும் இவர்களே காரணமாகிறார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், இவர்களது எதிரியை இவர்களே உருவாக்குகிறார்கள்.

பிறகு அந்த எதிரியை மென்மையாக வெற்றியடைகிறார்கள். இதை நாம் எத்தனை நாட்களுக்கு செய்வது. இதற்கு முன் நாம் ஏழரைச்சனியில் இருந்தபோது, இவர்களுக்கு ஏராளமான பிரச்னைகள் இருந்தது.

ஜான் ஏறினால் முழம் சறுக்கும் விருச்சிகம்:

ஏழரைச்சனி முடிந்தவுடன் விருச்சிக ராசியினருக்கு அர்த்தாஷ்டமச்சனி வந்துவிட்டது. இவர்களுக்கு குருவின் பார்வையில் ஏதோ விசயங்கள் நகர்ந்துகொண்டு இருக்கின்றது. அவ்வளவு தான்.

ஜான் ஏறினால் முழம் சறுக்கும் விருச்சிக ராசியினருக்கு. வெளியில் சொல்லமுடியாத பிரச்னை இருக்கும். வீடு, வாகனம், உறவு என ஏதோ பிரச்னை இருந்துகொண்டு தான் இருக்கும். கடகத்திற்கு அஷ்டமச்சனி விட்டதுபோலவே, விருச்சிகத்துக்கு அர்த்தாஷ்டமச்சனி பூரணமாக விடுகிறது.

இதனை அவர்கள் பிளஸ் ஆக எடுத்துக்கொள்ளலாம். சனி 11ஆம் வீட்டைப் பார்ப்பதால் லாபம் ஏற்படும்.

சனி முதலில் குருவின் ஸ்தானத்தில் பயணம் செய்யும்போது, தனம் ஸ்தானத்தில் ஒரு பிராப்தம் என்பது ஏற்படும். கடன்கள் நிவர்த்தியாகும். இந்த சனிப்பெயர்ச்சியில் விருச்சிக ராசியினர் முதலீடுகளில் கவனமாக செயல்படவேண்டும். நான்காம் பார்வையில் ராகு இருந்தால் அவர் குரு பார்வையில் இருக்கிறார்.

விருச்சிக ராசியினராக இருக்கும் தொழில் நுட்ப மாணவர்களுக்கு நல்ல அபிவிருத்தியான காலகட்டம். விருச்சிக ராசிப்பெண்களுக்கு, ராசியாதிபதி செவ்வாய், அஷ்டமத்தில் மறைகிறது. செவ்வாய் என்பது பெண்களுக்குக் கணவரைக் காட்டுகிறது. இதனால் உடல்நிலை மற்றும் கணவர் சார்ந்த விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை. 

விருச்சிக ராசியினருக்கு பேச்சு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை: 

ஏனென்றால், விருச்சிக ராசியினர் பொதுவாகவே, எதையும் மனதில் வைத்துக்கொள்ளத் தெரியாது. படக்குன்னு பேசிடுவாங்க. அதனால் விருச்சிக ராசிப் பெண்கள் கொஞ்சம் கவனமாகப் பேசுவது நல்லது. விருச்சிக ராசிப் பெண்களின் தந்தையின் உடல் நிலையிலும் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ராசியாதிபதி செவ்வாய் என்பதால், இவர்களுக்கு முருக வழிபாடு மற்றும் குரு வழிபாடு கைகொடுக்கும். விருப்பப்பட்டால் அஷ்டமி திதிகளில் பைரவர் வழிபாடு செய்யலாம். விருச்சிக ராசியினருக்கு 2025ஆம் ஆண்டு, சனிப்பெயர்ச்சி 90% நன்றாக இருக்கிறது.

கால புருஷ சக்கரத்தின்படி, சனி பகவான், துலாம் ராசியில் தான் தராசுபோல் இருந்து உச்சம் அடைகிறார்'' எனக் கூறிமுடித்தார். 

நன்றி: ஐபிசி பக்தி யூட்யூப் சேனல், ஜோதிடர் வேல் சங்கர்

பொறுப்புத்துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்