Money Luck: 2025ல் சனி திசை மாறும்.. திரும்பும் பக்கம் எல்லாம் வெற்றிதா.. எந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கும்
Money Luck : 2025ல் சனி பகவான் குரு வியாழனின் மீன ராசிக்கு மாறுகிறார். மீனத்தில் சனி சஞ்சரிப்பதால் அடுத்த இரண்டரை வருடங்கள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். மீன ராசியில் சனியின் சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு லாட்டரியை உருவாக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Money Luck : ஜோதிடத்தில், சனி கர்மா அல்லது நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறது. ஒன்பது கிரகங்களில் சனி மிக மிக மெதுவாக செல்கிறது. சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சுமார் இரண்டரை வருடங்கள் எடுததுக்கொள்கிறார்.
சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.
ஜனவரி 2023 இல் சனி தேவ் தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்தார், மேலும் இரண்டரை ஆண்டுகள் இந்த ராசியில் இருப்பார்.
மார்ச் 29, 2025 அன்று சனி கும்பம் ராசியிலிருந்து விலகி மீன ராசியில் பிரவேசிக்கிறார். மீன ராசியில் சனியின் சஞ்சாரத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் சனிப்பெயர்ச்சி ஆரம்பமாகி, மகர ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி சாதகம் உண்டாகும். மீன ராசியில் சனியின் சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வெற்றியை தரும் என பார்க்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சனியின் சதே சதி கடைசி கட்டம் நடந்து வருகிறது. சனி மீன ராசிக்கு மாறியவுடன், மகர ராசிக்காரர்கள் சதே சதியிலிருந்து நிவாரணம் பெறுவார்கள். சனியின் கோபம் நீங்கியவுடன், மகர ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகம் மற்றும் தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வருமான ஆதாரங்கள் உருவாகும். ஏற்கனவே மகர ராசியினரின் பணம் எங்கேனும் சிக்கி இருந்தால் அது திரும்பக் கிடைக்கலாம். மகர ராசியில் பிறந்த மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.
கடகம்
கடக ராசி உள்ளவர்கள் மீனத்தில் சனி சஞ்சரிப்பதால் மன உளைச்சலில் இருந்து விடுபடுவார்கள். கடக ராசியில் பிறந்தவர்களின் பேச்சால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். அதுமட்டும் இல்லாமல் கடக ராசியினருக்கு திடீர் நிதி ஆதாயம் ஏற்படும். அரசு வேலையில் இருப்பவர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சமூக மரியாதையும் கௌரவமும் அதிகரிக்கும். உங்கள் இலக்குகளில் வெற்றியை அடைவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மீன ராசிக்கு சனி சஞ்சரிக்கும் போதே சனி கொடுத்த துயரத்தில் இருவிடுதலை கிடைக்கும். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு விருச்சிக ராசியில் இருந்து சனியின் சாய்ந்த பார்வை நீங்கும். சனியின் அசுப பலன்கள் நீங்கி, உங்கள் மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். மதம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சிலரது வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கும், இதன் காரணமாக நீங்கள் திடீர் நிதி ஆதாயத்தைப் பெறுவீர்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9