Sani Transit: மீன ராசியில் சனியுடன் அமரும் 6 கிரகங்கள்.. மிக மோசமான நேரம்.. இந்த ராசியினர் உடல் நலனில் கவனம் தேவை
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Transit: மீன ராசியில் சனியுடன் அமரும் 6 கிரகங்கள்.. மிக மோசமான நேரம்.. இந்த ராசியினர் உடல் நலனில் கவனம் தேவை

Sani Transit: மீன ராசியில் சனியுடன் அமரும் 6 கிரகங்கள்.. மிக மோசமான நேரம்.. இந்த ராசியினர் உடல் நலனில் கவனம் தேவை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Mar 24, 2025 04:38 PM IST

மீன ராசியில் சனி சஞ்சாரம். சனி பகவான் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசிக்குச் செல்வதால் இந்தப் பெயர்ச்சி சிறப்பு வாய்ந்தது என கூறப்படுகிறது. இந்த நேரத்தில் ஆறு கிரகங்கள் மீன ராசியில் அமர்வதால், சில ராசியினருக்கு மிகவும் மோசமான நேரமாக இருக்கும்.

மீன ராசியில் சனியுடன் அமரும் 6 கிரகங்கள்.. மிக மோசமான நேரம்.. இந்த ராசியினர் உடல் நலனில் கவனம் தேவை
மீன ராசியில் சனியுடன் அமரும் 6 கிரகங்கள்.. மிக மோசமான நேரம்.. இந்த ராசியினர் உடல் நலனில் கவனம் தேவை

இது போன்ற போட்டோக்கள்

இதுபோன்ற சூழ்நிலையில், பல கிரகங்களின் சேர்க்கை சரியானதாகக் கருதப்படவில்லை. தந்தை மற்றும் மகன் சேர்க்கையைப் போலவே, அதாவது சனி மற்றும் சூரியனின் சேர்க்கையைப் போல, சனி மற்றும் ராகுவின் சேர்க்கை சரியானதாகக் கருதப்படவில்லை.

சத்கிரஹி மற்றும் பஞ்சகிரஹி யோகம் நல்லதாகக் கருதப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது அசுபமாகக் கருதப்படுகிறது. இதன் விளைவாக சில ராசிக்காரர்கள் பாதிப்புகளையும் சந்திக்க நேரிடலாம். சனியின் ராசி மாற்றத்தால் தாக்கத்தை சந்திக்கப்போகும் ராசிகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்க சனியின் சதேசாதி இறங்குவதால் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக சிலருக்கு கால்களில் பிரச்னைகள் ஏற்படலாம். பணப் பற்றாக்குறை இருக்காது. இழுபறியில் இருந்து வரும் தொகை, சிக்கிக்கொண்டு பணம் மீண்டும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களை யாராலும் தோற்கடிக்க முடியாது.

மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு சில பிரச்னைகள் ஏற்படலாம். இந்த நேரத்தில் உங்களுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் வரலாம். வாழ்க்கைத் துணையுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள், மோதல்கள் உருவாகலாம். ஒட்டுமொத்தமாக, நேரம் உங்களுக்கு சாதகமானதாக இல்லை.

சிம்மம்: சனியின் தாயா தாக்கம் இந்த ராசிக்காரர்களுக்குத் தொடங்கும். இது உங்கள் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும். உடல் வலி மற்றும் நோய் காரணமாக இதுபோன்ற சூழ்நிலை ஏற்படலாம்.

தனுசு: சனியின் தாயா தாக்கம் தொடங்கும். இது உங்களுக்கு உடல்நலப் பிரச்னைகளைத் தரும். வியாபாரத்தில் லாபம் ஈட்ட எந்த வாய்ப்பும் இருக்காது. குடும்பத்தில் பிரச்னைகள் இருக்கும், குழந்தைகளின் விஷயத்திலும் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடலாம்

சனி பகவான்

நவகிரகங்களின் நீதிமான் பதவியை வகித்து வருபவர் சனி பகவான். நியாய தர்மங்களுக்கு ஏற்றவாறு பிரதிபலன்களை திருப்பக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார்.

சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனிபகவான் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்த 2025ஆம் ஆண்டு சனி பகவான் தனது இடத்தை மீன ராசிக்கு மாற்றுகிறார். இதன் விளைவாக சில ராசிகள் நன்மையும், சில ராசிகள் மோசமான விளைவுகளையும் எதிர்கொள்கின்றனர்.

சனியின் பெயர்ச்சியின் போதும் மேலும் ஆறு கிரகங்களும் மீன ராசியில் பயணிப்பதால் ஒவ்வொரு ராசிகளும் நன்மை, தீமை என இரு தாக்கங்களும் ஏற்பட போகிறது.

 

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், இளங்கலை காட்சிவழி தொடர்பியல், முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்றவர். 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் என 16 ஆண்டுகளுக்கு மேல் அனுபவத்துடன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் அனைத்து பிரிவுகளிலும் கட்டுரை எழுதுபவர். விளையாட்டு, கிரிக்கெட், சினிமா, லைப்ஸ்டைல் பிரிவுகளில் தனித்துவமான பங்களிப்பை அளித்து வருகிறார். விளையாட்டு, சினிமா, பயணம், சமைத்தல் பிடித்தமான பொழுபோக்கு
Whats_app_banner