சனியின் வக்கிர இயக்கம்.. இந்த ராசிக்காரர்களுக்கு நல்லதல்ல, கவனம் தேவை.. உங்க ராசி இருக்கா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனியின் வக்கிர இயக்கம்.. இந்த ராசிக்காரர்களுக்கு நல்லதல்ல, கவனம் தேவை.. உங்க ராசி இருக்கா?

சனியின் வக்கிர இயக்கம்.. இந்த ராசிக்காரர்களுக்கு நல்லதல்ல, கவனம் தேவை.. உங்க ராசி இருக்கா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 27, 2025 05:30 PM IST

ஜோதிடத்தில், கிரகங்களின் வக்கிர இயக்கம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் வக்கிர இயக்கம் 12 ராசிக்காரர்களையும் பாதிக்கிறது. ஜூலை 13 முதல், மீன ராசியில் சனி பகவான் வக்கிர இயக்கம் காரணமாக கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்.

சனியின் வக்கிர இயக்கம்.. இந்த ராசிக்காரர்களுக்கு நல்லதல்ல, கவனம் தேவை.. உங்க ராசி இருக்கா?
சனியின் வக்கிர இயக்கம்.. இந்த ராசிக்காரர்களுக்கு நல்லதல்ல, கவனம் தேவை.. உங்க ராசி இருக்கா?

இது போன்ற போட்டோக்கள்

சனி பகவான் வக்கிரம்

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவராக திகழும் சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

நீதிமானாக விளங்கும் சனி பகவான் வரும் ஜூலை மாதம் மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்ய உள்ளார். சனி வக்கிர பெயர்ச்சி சில ராசிகளுக்கு நன்மைகளை கொடுத்தாலும், சில ராசிகளுக்கு நற்பலன்களை தரவில்லை.

ஜூலை 13 அன்று, சனி பகவான் இயக்கம் மாறப் போகிறது. இந்த நாளில், சனி பகவான் மீன ராசியில் வக்கிரமாக மாறுவார். ஜோதிடத்தில் சனி பகவான் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளார். அவர் சுபமாக இருக்கும்போது, ​​ஒருவரின் வாழ்க்கை ராஜாவைப் போல மாறும். அதுவது அவரது இயக்கம் அசுபமாக இருக்கும்போது, ராஜா கூட ஏழையாகும் சூழல் ஏற்படும்.

சனியின் வக்கிர இயக்கம் காரணமாக, சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். சனி வக்ர நிவர்த்தி காரணமாக எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்

சனி வக்ர நிவர்த்தியால் மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலைமை பாதிக்கப்படும். சொத்து தொடர்பான தகராறுகள் அதிகரிக்கலாம். இந்த நேரத்தில், உங்கள் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும். பயனற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உரையாடல் மூலம் பிரச்னையைத் தீர்க்க முயற்சி செய்ய வேண்டும்.

கும்பம்

சனி வக்ர நிவர்த்தி கும்ப ராசியினரின் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளை கொண்டு வரும். மனம் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படும். எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தொந்தரவு இருக்கும். உங்கள் கௌரவத்தைப் பாதிக்கும் செயல் நடக்கலாம்.

இந்த நேரத்தில், மனம் இனம் புரியாத பயத்தால் தவிக்கும். திருமணத்தில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் சச்சரவுக்கான அறிகுறிகள் இருக்கும். மன அமைதியின்மை இருக்கும். குடும்ப பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்.

மீனம்

சனி வக்ர நிவர்த்தி காரணமாக சூழ்நிலைகள் பாதகமாக இருக்கும். உறவுகளில் கருத்து வேறுபாடு அதிகரிக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்தியல் வேறுபாடுகள் ஏற்படலாம். பயனற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். கோபத்தைக் கட்டுப்படுத்தவும்.

உணர்ச்சி ரீதியாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். பண விஷயங்களில் கவனமாக இருங்கள். இல்லையெனில் நிதி இழப்பு ஏற்படலாம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.