Aquarius: கும்பத்தில் கூடும் சனி - சுக்கிரன் சேர்க்கை.. வெற்றிக்குறி பெறும் ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Aquarius: கும்பத்தில் கூடும் சனி - சுக்கிரன் சேர்க்கை.. வெற்றிக்குறி பெறும் ராசிகள்!

Aquarius: கும்பத்தில் கூடும் சனி - சுக்கிரன் சேர்க்கை.. வெற்றிக்குறி பெறும் ராசிகள்!

Marimuthu M HT Tamil
Feb 26, 2024 07:27 AM IST

கும்ப ராசியில் நடக்கும் சனி பகவான் மற்றும் சுக்கிரனின் இணைவால் அதிர்ஷ்டம்பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

<p>கும்ப ராசியில் நடக்கும் சனி பகவான் மற்றும் சுக்கிரனின் இணைவு</p>
<p>கும்ப ராசியில் நடக்கும் சனி பகவான் மற்றும் சுக்கிரனின் இணைவு</p>

இது போன்ற போட்டோக்கள்

ரிஷபம்: இந்த ராசியினருக்கு சுக்கிரன் மற்றும் சனி பகவானின் அருளால், புத்தம்புது வாய்ப்புகள் தேடி வரும். ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கூடும். பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும்.

கடகம்: வாழ்க்கையில் கடந்த சில நாட்களாகவே தொய்வு,மனக்குழப்பத்துடன் இருக்கும் கடகராசியினரே, இனி உங்கள் வாழ்வில் இக்காலகட்டத்தில் ஓரளவு நல்ல பலன்கள் கிட்டும். இத்தனை நாட்களாகத் தொடங்காமல் கிடப்பில் போட்ட பணிகளை செய்துமுடிப்பீர்கள். சமூகத்தில் மரியாதை கூடும். பொறுத்தார் பூமி ஆள்வார்.

துலாம்: இந்த ராசிக்கு சுக்கிரன் மற்றும் சனி பகவானின் சேர்க்கையால், வாழ்வில் நல்லதிர்ஷ்டம் கிடைக்கும். முன்பே செய்த முதலீடுகளால் நிகர லாபம் அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்கள். உற்சாகமான சூழல் உண்டாகும்.

மகரம்: பல நாட்களாக துன்பங்களைச் சந்தித்த மகர ராசியினரே, ஓரளவு நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நல்ல நண்பர்களின் ஆறுதல் மொழிகளைக் கேட்பீர்கள். இறை நம்பிக்கை அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னைகள் அகலும்.

கும்பம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரன் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் சொந்த பந்தங்களுடன் இருந்த பகை உணர்வு மாறும். வருவாய் ஓரளவு இருக்கும். பகட்டுக்காக செலவு செய்து பணத்தை வீணடிப்பீர்கள். தொழில் மேம்படும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்