சனியின் நகர்வு.. தீபாவளிக்குப் பிந்தைய சனியின் நேரடி நகர்வு.. பட்ட துன்பங்கள் எல்லாம் கரைந்து வெல்லும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனியின் நகர்வு.. தீபாவளிக்குப் பிந்தைய சனியின் நேரடி நகர்வு.. பட்ட துன்பங்கள் எல்லாம் கரைந்து வெல்லும் ராசிகள்

சனியின் நகர்வு.. தீபாவளிக்குப் பிந்தைய சனியின் நேரடி நகர்வு.. பட்ட துன்பங்கள் எல்லாம் கரைந்து வெல்லும் ராசிகள்

Marimuthu M HT Tamil
Nov 01, 2024 04:49 PM IST

சனியின் நகர்வு.. தீபாவளிக்குப் பிந்தைய சனியின் நேரடி நகர்வு.. பட்ட துன்பங்கள் எல்லாம் கரைந்து வெல்லும் ராசிகள் குறித்துக் காண்போம்.

சனியின் நகர்வு.. தீபாவளிக்குப் பிந்தைய சனியின் நேரடி நகர்வு.. பட்ட துன்பங்கள் எல்லாம் கரைந்து வெல்லும் ராசிகள்
சனியின் நகர்வு.. தீபாவளிக்குப் பிந்தைய சனியின் நேரடி நகர்வு.. பட்ட துன்பங்கள் எல்லாம் கரைந்து வெல்லும் ராசிகள்

ஜோதிடத்தில், சனியின் இருப்பு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. சனி பகவான் நேரடியாக வந்தவுடன், அது எதிர் திசையில் செல்வதை நிறுத்துகிறது. இதனால் மக்கள் வாழ்வில் பல பிரச்னைகள் நீங்கும். சனி பகவான் தற்போது கும்ப ராசியில் இருக்கிறார்.

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனி தனது ராசியை மாற்றுகிறார். இவ்வாறு சனி பகவான் 2025ஆம் ஆண்டில் தனது ராசியை மாற்றவுள்ளார். இப்போது தீபாவளிக்குப் பிறகு, சனி பகவானின் மாற்றம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வரும் நவம்பர் 15ஆம் தேதி முதல் சனி பகவான், நேரடியாக நகரத் தொடங்குகிறார். குருப்பெயர்ச்சி ஆண்டு முழுவதும் அற்புதமான ராஜயோகத்தை வழங்கி வருகிறார். பஞ்சமஹா புருஷ ராஜ யோகங்களில் ஒன்றான சஷ ராஜ யோகம் ஆண்டு முழுவதும் சனி பகவானால் சில ராசிகளுக்குக் கிடைக்கிறது.

இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் மிகுந்த பயன் அடைவார்கள். எந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

கடகம்:

தீபாவளிக்குப் பின் வரும் காலம், கடக ராசியினருக்கு மிகுந்த நன்மையைத் தரும். உங்கள் வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்து வந்த குழப்பம் இப்போது குறையும். சனி பகவான், இப்போது உங்கள் நல்ல செயல்களின் பலன்களை உங்களுக்குத் தர ஆரம்பிப்பார். உங்கள் கெட்ட செயல்கள் அனைத்தும் தீர ஆரம்பிக்கும். எனவே, இப்போது நீங்கள் மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் பெறப்போகிறீர்கள்.

மீனம்:

தீபாவளிக்குப் பிறகு வரும் நேரமும் காலமும் மீன ராசியினருக்கு அற்புதமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் இதற்கு முன் பட்ட கஷ்டமான சூழ்நிலைகளில் இருந்து நிவாரணம் பெறுவார்கள். அவர்களுக்கு சில புதிய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கை, தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும். புதிதாக விஷயங்களைத் தொடங்க முயற்சிக்க வேண்டும். வியாபாரம் செய்ய சாதகமான சூழ்நிலைகள் உருவாகும்.

மகரம்:

தீபாவளிக்குப் பிறகு, மகர ராசியில் ஏழரை நாட்டுச் சனியின் தாக்கம் குறைவாகவே இருக்கும். எனவே, மகர ராசியினர் கலவையான முடிவுகளை எதிர்கொள்வார்கள்.

சில மாதங்களில், மகர ராசியினர் ஏழரை நாட்டுச் சனியின் பாதிப்பில் இருந்து முற்றிலுமாக விடுவிக்கப்படுவார்கள். சனி பகவான் மீன ராசியில் நுழையும் போது, மகர ராசியில் ஏழரை நாட்டுச் சனியின் தாக்கம் நீங்கும். மகர ராசியில் சனியின் பாதிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. அதனால், இனிமேல் இது உங்களுக்கு நல்ல நேரமாக இருக்கும்.

இந்த நேரத்தில் அனைவரிடமும் நல்ல அணுகுமுறையைக் கொண்டிருங்கள். வீண் விஷயங்களில் தலையிட வேண்டாம். காதல் வாழ்க்கையில் உங்கள் முயற்சிகளைக் காட்டுங்கள். அப்போதுதான் உங்கள் காதல் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்