Sani Vakra Peyarchi: ராஜயோகம் உறுதி.. மகாராஜாவாகும் சிம்மம்.. ஆனால்.. சிம்மத்திற்கான வக்ர சனி பலன்கள்
Sani Vakra Peyarchi: இந்த மூன்று விஷயங்களை கைகொள்ளும் போது, உங்கள் எதிர்காலம் நல்ல நிலைமைக்கு வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடக்கும். - வக்ர சனி பலன்கள்!

சிம்மராசிக்காரர்களை பொருத்தவரை, அவரது ராசியில் சனிபகவான் வக்ர நிலை அடைந்திருக்கிறார். ஆகையால், அவர்களுக்கு ஜாக்பாட் யோகம் அடிக்கும் என்று ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 28, 2025 02:58 PMMoney Luck: குரு குறி வைத்த ராசிகள் யார்?.. நட்சத்திர பெயர்ச்சியால் நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்குமா?
Mar 28, 2025 12:36 PMராகு கேது பலன்கள்: ராகு கேது பணக்கார யோகத்தை பெறப்போகின்ற ராசிகள் யார் தெரியுமா?.. உங்க ராசி இருக்கா?
Mar 28, 2025 07:00 AMBad Luck Rasis: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.. அஸ்தமனத்தில் சிக்கிய ராசி.. சனி உச்சம்!
Mar 28, 2025 06:35 AMஇரட்டை ராஜ யோகம்.. மீன ராசியில் சூரியன்.. அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் மூன்று ராசிகள்.. நல்ல லாபம் கிட்டும்!
Mar 28, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : சவால்களை தைரியமா எதிர் கொள்ளுங்கள்.. வெற்றி தேடி வரும்.. இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 27, 2025 05:16 PMGuru: 2025-ல் பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க போகுதா?
இது குறித்து அவர் பேசும் போது, “வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும், மீண்டும் எழும் குணம் கொண்டவர்கள் சிம்ம ராசிக்காரர்கள்; சிம்ம ராசி அன்பர்களுக்கு, சனி பகவான் ஜூன் 12 முதல் நவம்பர் 4ம் தேதி வரை வக்ர நிலையில் பயணிக்கிறார். அவர் சமசப்தமாக வக்ர சனியாக, சிம்மத்தை பார்க்கிறார். இது என்ன மாதிரியான பலன்களை தரும் என்பதை பார்க்கலாம்.
ஜாக்பாட் யோகம் உறுதி;
இப்போது பெரும்பாலான சிம்ம ராசிக்காரர்களுக்கு, குடும்பத்தில் தகராறு நடந்து கொண்டிருக்கிறது. போதுமான வருமானம் தங்கவில்லை. இரவில் தூக்கமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும், உள்ளுக்குள் ஏதோ ஒரு நம்பிக்கையை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.
சமசப்தமாக இருக்கும் சனி பகவான் ராஜயோகத்தை நிச்சயம் தருவார். அரசியல் துறையில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் மிகப்பெரிய உயரத்தை அடைவார்கள். அதே போல மருத்துவத்துறையில் இருக்கும் மருத்துவர்களும், பெரிய இடத்தை நோக்கி நகர்வர். விளையாட்டுத்துறையில் இருக்கும் நபர்களும் அடுத்தக்கட்டத்திற்கு செல்வர். அரசு வேலை பார்ப்பவர்களுக்கு நினைத்த இடத்தில் பணிமாற்றம் கிடைக்கும்.
வருமானத்தை தண்ணீர் போல செலவழிக்கக்கூடாது. எல்லோரையும் நம்பி விடக்கூடாது.
சிம்ம ராசிக்கு இந்த வக்ர பெயர்ச்சிதான் ஜாக்பாட் யோகம் மூலமாக நிச்சயம் யோகம் கிடைக்கும். ஆனால், இந்த காலத்தில் நீங்கள் 3 விஷயங்களை கைகொள்ள வேண்டும். முதலில் விவேகமாக இருக்க வேண்டும். இரண்டாவது எல்லோரையும் நம்பி விடக்கூடாது. வருமானத்தை தண்ணீர் போல செலவழிக்கக்கூடாது. இந்தக்காலத்தில் நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்”
இந்த மூன்று விஷயங்களை கைகொள்ளும் போது, உங்கள் எதிர்காலம் நல்ல நிலைமைக்கு வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடக்கும். காரைக்கால் அருகில் இருக்கும் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர ஸ்வாமி கோயிலுக்கு சென்று வழி பட வேண்டும். என்று பேசினார்.
சனி பகவானை வெல்வது எப்படி?
சனி பகவானை வெல்வது எப்படி என்பதை பிரபல ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன், தன்னுடைய ஆஸ்ட்ரோ வெல் யூடியூப் சேனலில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக பேசி இருக்கிறார்.
அவர் பேசும் போது, “ஏழரை சனி என்றால் கண்டிப்பாக பிரச்சினை இருக்கத்தான் செய்யும்; அதனை முதலில் நாம் மனதார ஒத்துக்கொள்ளதான் வேண்டும். சனி பகவானுக்கு நீங்கள் விரோதி அல்ல. சனி பகவானை பொருத்தவரை நல்ல கர்மாவை செய்தவன் அவருக்கு நண்பன் ஆகிறான். நல்ல கர்மாவை செய்தவனுக்கு அஷ்டமசனியோ அல்லது ஏழரை சனியோ அந்த காலத்தில் அவனுக்கு நல்ல பலன்களே கிடைக்கும். ஏனென்றால் அவன் தர்மகாரகன். தர்மத்திற்கு பேர் போனவன். மீனராசிக்கு ஏழரை சனி நடக்கிறது. அவர்களை பொருத்தவரை அவர்களுக்கு பொதுவாகவே நன்றாக வாழ வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும்.
ஆனால் அதையெல்லாம் இந்த காலகட்டத்தில் ஒத்தி வைத்துவிட்டு சாதாரணமாக வாழ பழகிக்கொள்ள வேண்டும்.அதாவது எளிமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் சனி பகவானை வெல்வதற்கான உத்தி. ஏழரை சனியில் சனி பகவான் உங்களது புத்தியை மழுங்கடிப்பார். எதை நீங்கள் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறீர்களோ, அதை செய்ய தூண்டுவார். எதை நீங்கள் பேசக்கூடாது என்று நினைக்கிறீர்களோ அதை பேச தூண்டுவார். இதுதான் உண்மை
இதிலிருந்து தப்பிப்பதற்கு உங்களது எண்ணங்களை அவ்வப்போது தூய்மை செய்ய வேண்டும். அதற்கு அதிகாலை 6 மணிக்கு முன்னதாக எழுந்து தியானம் செய்ய வேண்டும். எண்ணங்கள் தூய்மையாகும் பொழுதே, உங்களது வார்த்தைகளில் ஒரு விதமான பிடிப்பு தன்மை வரும். வார்த்தைகளில் பிடிப்பு வரும்பொழுது, உங்களது செயல்களிலும் ஒருவிதமான பிடிப்பு வரும்.
இவை மூன்றிலும் பிடிப்பு வரும் பொழுது உங்களது வாழ்க்கையிலும் ஒரு விதமான பிடிப்பு வரும். சனி பகவான் உங்களிடம் இருக்கும் செல்வத்தை பிடுங்குவார். ஆகையால் அவர் பிடுங்குவதற்கு முன்னதாகவே, நீங்கள் தான தர்மம் செய்ய வேண்டும். சனி பகவான் உறவுகளை பிரிக்கும் வேலையைச் செய்வார். ஆகையால் நீங்கள் உங்களது உறவுகளிடம் கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும். பெரிய நந்தி இருக்கக்கூடிய சிவாலயங்களுக்குச் சென்று அங்கு இருக்கக்கூடிய பசுவிற்கு அகத்திக் கீரையை உணவாக கொடுக்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்