இன்று வக்ர நிவர்த்தி ஆகும் சனி பகவான்! ‘துலாம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கான பலன்கள்!’
கடந்த ஜூன் 29ஆம் தேதி கும்பம் ராசியில் வக்ரம் பெற சனி பகவான் 139 நாட்களுக்கு பிறகு நவம்பர் 15ஆம் தேதியான இன்றைய தினம் வக்ர நிர்வர்த்தி பெற உள்ளார். சனி பகவான் வக்ர நிர்வர்த்தி பெறுவது சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை கொண்டு வரும். சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் சனி பகவான் ஆவார். ஜோதிடத்தை பொறுத்தவரை ஒருவரது செயல்பாடுகளை சீர்த்துக்கி பார்த்து அதற்கு ஏற்ற பலன்களை தரக்கூடிய நீதிமானாக சனி பகவான் விளங்குகிறார். நாம் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே அவரது பலன்கள் இருக்கும். சனி பகவானின் தாக்கம், நம்மை கடினமாக உழைக்கவும், பொறுமையாக இருக்கவும் கற்றுத்தருகிறது. பல விதமான தொழில்களுக்கு காரக கிரகமான சனி பகவான் நீதி தவறாத பண்பு உடையவர் ஆவார். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வரை வாசம் செய்யும் சனி பகவான் அந்த ராசிக்காரருக்கு மிகப்பெரிய வாழ்கை அனுபவத்தை வழங்க கூடிய கிரகமாக உள்ளார். சனி பகவான் தற்போது கும்பம் ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
அதே வேளையில் கடந்த ஜூன் 29ஆம் தேதி கும்பம் ராசியில் வக்ரம் பெற சனி பகவான் 139 நாட்களுக்கு பிறகு நவம்பர் 15ஆம் தேதியான இன்றைய தினம் வக்ர நிர்வர்த்தி பெற உள்ளார். சனி பகவான் வக்ர நிர்வர்த்தி பெறுவது சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை கொண்டு வரும். சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். சனி பகவான் வக்ர நிர்வர்த்தி அடைவது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை உண்டாக்கும். சனி வக்ர நிர்வர்த்தியால் சில ராசிக்காரர்களுக்கு உடல், மனம், பணம் சார்ந்த பிரச்னைகளை உண்டாக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மனம் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். குடும்ப ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் மாற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் தன்னம்பிக்கை குறையும். குடும்பத்தில் ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் உயர்வு உண்டாகும். கடின உழைப்பு மூலம் லாபம் உண்டாகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் முழு நம்பிக்கை உடன் செயல்பட வேண்டும். அமைதியாக நடந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமாக இருக்கவும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கூடும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள், ஆனால் உங்கள் மனதில் சற்று குழப்பம் ஏற்படலாம். குடும்பத்துடன் ஆன்மீக தலங்களுக்கு செல்வீர்கள். பணியிடங்களில் பணிச்சுமை அதிகரிக்கும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் தன்னடக்கத்துடன் இருக்க வேண்டும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். கல்விப் பணிகளில் வெற்றி கிடைக்கும். கலை அல்லது இசை மீதான ஆர்வம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
மீனம்
மீனம் ராசிக்காரர்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். ஆனால் உங்கள் மனமும் கலக்கமடையும். கல்விப் பணிகளில் வெற்றி பெறுவீர்கள். எழுதுதல் போன்ற அறிவுசார் வேலைகளில் மரியாதை கூடும். வீட்டில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.