சனீஸ்வரன் அள்ளி கொட்டப்போகும் ராசிகள்.. அனுக்கிரகம் யாருக்கு.. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனீஸ்வரன் அள்ளி கொட்டப்போகும் ராசிகள்.. அனுக்கிரகம் யாருக்கு.. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

சனீஸ்வரன் அள்ளி கொட்டப்போகும் ராசிகள்.. அனுக்கிரகம் யாருக்கு.. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 07, 2025 03:39 PM IST

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் வக்கிர நிலையடைந்துள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

சனீஸ்வரன் அள்ளி கொட்டப்போகும் ராசிகள்.. அனுக்கிரகம் யாருக்கு.. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!
சனீஸ்வரன் அள்ளி கொட்டப்போகும் ராசிகள்.. அனுக்கிரகம் யாருக்கு.. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

இது போன்ற போட்டோக்கள்

சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் தற்போது குரு பகவானின் தாசியான மீன ராசியில் நுழைந்திருக்கின்றார்.

சனி பகவான் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி அன்று மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்யப் போகின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் வக்கிர நிலையடைந்துள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

கடக ராசி

சனி வக்கிர நிலை உங்களுக்கு சிறப்பான நன்மைகளை கொடுத்த மன ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் வக்கிர நிலை அடைகின்ற காரணத்தினால் அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. பண ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும் என கூறப்படுகிறது.

வேலை மற்றும் வியாபாரத்தில் அதிர்ஷ்டம் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என கூறப்படுகிறது.

கும்ப ராசி

சனி வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சியான நன்மைகளை கொடுக்கப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நிறைய சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.

பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது. மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் முன்னேற்றம் வரும் என கூறப்படுகிறது.

மீன ராசி

சனி வக்கிரப் பெயர்ச்சி உங்களுக்கு பயனுள்ளதாக அமையப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நிதி நன்மைகள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. குடும்பத்தினரோடு மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பணக்கார யோகம் தேடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்றுத்தரும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது நல்லது என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.