சனி முடிவெடுத்துட்டார்! 3 ராசிகளுக்கு கொட்டப்போகுது பணம்! நன்னா பிடிச்சுக்கோங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி முடிவெடுத்துட்டார்! 3 ராசிகளுக்கு கொட்டப்போகுது பணம்! நன்னா பிடிச்சுக்கோங்க!

சனி முடிவெடுத்துட்டார்! 3 ராசிகளுக்கு கொட்டப்போகுது பணம்! நன்னா பிடிச்சுக்கோங்க!

Kathiravan V HT Tamil
Nov 19, 2024 05:50 AM IST

Sani Peyarchi Palangal 2025: அடுத்து வர உள்ள 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று, சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

சனி முடிவெடுத்துட்டார்! 3 ராசிகளுக்கு கொட்டப்போகுது பணம்! நன்னா பிடிச்சுக்கோங்க!
சனி முடிவெடுத்துட்டார்! 3 ராசிகளுக்கு கொட்டப்போகுது பணம்! நன்னா பிடிச்சுக்கோங்க!

அடுத்து வர உள்ள 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று, சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதன் மூலம் மகரம் ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த ஏழரை சனி பாதிப்புகள் முழுமையாக நிறைவடைகின்றது. கும்பம் ராசிக்கு பாத சனியும், மீனம் ராசிக்கு ஜென்மசனியும், மேஷம் ராசிக்கு விரைய சனியும் தொடங்க உள்ளது.

நன்மை பெறும் 3 ராசிகள்

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சிக்கு பிறகான காலம் அதிக நன்மைகளை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், வருமான உயர்வும் கூடும். சிலருக்கு உயர்கல்விக்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணியில் இருந்த தடைகள் நீங்கும். திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

2. விருச்சிகம் 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி சனி பெயர்ச்சிக்கு பிறகு சுப பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் பொருள், செல்வம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பழைய முதலீடுகளில் இருந்து பணம் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை கூடும். நிலம், கட்டிடம், வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். 

3. கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சிக்கு பிறகான காலம் சற்று ஆறுதல்களையும் நன்மைகளையும் தரும்.  தடைபட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நேர்காணல்களில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டு. உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner