இனி எல்லாம் நலமே! அஷ்டம சனி விலகும் விருச்சிக ராசிக் காரர்களே! இனி தான் இருக்கு!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இனி எல்லாம் நலமே! அஷ்டம சனி விலகும் விருச்சிக ராசிக் காரர்களே! இனி தான் இருக்கு!

இனி எல்லாம் நலமே! அஷ்டம சனி விலகும் விருச்சிக ராசிக் காரர்களே! இனி தான் இருக்கு!

Suguna Devi P HT Tamil
Published Oct 29, 2024 07:05 PM IST

2025 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி நடக்க இருக்கிறது. இந்த சனிப்பெயர்ச்சி பல ராசிகளுக்கு நன்மைகளை அளிக்க கூடியதாக இருப்பினும். சில ராசிகளுக்கு பிரச்சனைகளையும் எதிர்மறையான விளைவுகளையும் கொண்டு வருகிறது.

இனி எல்லாம் நலமே! அஷ்டம சனி விலகும் விருச்சிக ராசிக் காரர்களே! இனி தான் இருக்கு!
இனி எல்லாம் நலமே! அஷ்டம சனி விலகும் விருச்சிக ராசிக் காரர்களே! இனி தான் இருக்கு!

இது போன்ற போட்டோக்கள்

கடந்த இரண்டு வருடங்களாக அஷ்டமசமி சனி நிலவியதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல துன்பங்கள் இருந்திருக்க கூடும். ஏனெனில் அஷ்டம சனி என்பது ராசிக்கு நான்காவது இடத்தில் சனி பார்வை உள்ளதாக அர்த்தம் எனவே இந்த நான்காவது இடத்தில் உள்ள சனி பல மருத்துவ செலவுகளையும் பல தோல்விகளையும் கொடுத்திருக்கும் ஆனால் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடக்க இருக்கும் சனி பெயர்ச்சியினால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுவரை நடந்த அனைத்து பிரச்சனைகளும் தீர்வு அதற்கான வழிகளை ஏற்படுத்தித் தருகிறது அதாவது ராசிக்கு ஐந்தாவது இடத்தில் சனி பெயர்ச்சி ஆகிறார் இதன் காரணமாக விருச்சிக ராசிக்கு பல மேன்மைமிகு பலன்களை அளிக்க உள்ளார்.

ஆரோக்கியம் மேம்படும் 

வரும் 2025 ஆம் ஆண்டிலேயே சனிப்பெயர்ச்சியை தொடர்ந்து குரு பெயர்ச்சி மற்றும் ராகுவும் பெயர்ச்சி அடைகிறார். குரு பகவானும் விருச்சிக ராசிக்கு எட்டாம் இடத்தில் இருந்து நற்பலன்களை வழங்குகிறார்.  பொதுவாக குருவும் சனிவும் சனியும் கேந்திர தொடர்பு இருக்கும்போது ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும். எனவே 2025 ஆம் வருடம் நடக்கப் போகும் பெயர்ச்சிகளில் அதிக நன்மைகளை ஈட்டும் ராசியாக விருச்சிக ராசி உள்ளது. இதுவரை அஷ்டம சனியால் சீராக இல்லாமல் இருந்த ஆரோக்கியம் தற்போது மேம்பட இருக்கிறது. எனவே இந்த 2025 வது வருடத்தில் சிறப்பான ராசிகளில் ஒன்றாக விருச்சிக ராசிக்காரர்கள் இருக்கின்றனர்.

பணம் கொடுத்து வாங்குதல் தொடர்பான தொழிலில் உள்ள விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த 2025 வது வருடம் சிறந்த லாபங்களை ஈட்டி தர உள்ளது. இதுவரை நிலுவையில் இருந்த அனைத்து கடன்களும் உங்களுக்கு வசூலாக உள்ளது என்பது நிச்சயமான உண்மையாகும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்