Sani Peyarchi: சனி கொடுக்கும் சம்பவம்.. மாடி வீடு யோகம்.. தொழில் வளர்ச்சி.. தொட முடியாத 3 ராசிகள் இதோ..
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Peyarchi: சனி கொடுக்கும் சம்பவம்.. மாடி வீடு யோகம்.. தொழில் வளர்ச்சி.. தொட முடியாத 3 ராசிகள் இதோ..

Sani Peyarchi: சனி கொடுக்கும் சம்பவம்.. மாடி வீடு யோகம்.. தொழில் வளர்ச்சி.. தொட முடியாத 3 ராசிகள் இதோ..

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 15, 2025 10:39 AM IST

Sani Peyarchi: மீன ராசியில் சனிபகவான் சஞ்சாரம் செய்யப்போகின்றார். இது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தில் ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Sani Peyarchi: சனி கொடுக்கும் சம்பவம்.. மாடி வீடு யோகம்.. தொழில் வளர்ச்சி.. தொட முடியாத 3 ராசிகள் இதோ..
Sani Peyarchi: சனி கொடுக்கும் சம்பவம்.. மாடி வீடு யோகம்.. தொழில் வளர்ச்சி.. தொட முடியாத 3 ராசிகள் இதோ..

இது போன்ற போட்டோக்கள்

சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசிகள் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று சனிபகவான் மீன ராசிக்கு செல்கிறார். இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும். வருகின்ற 2027 ஜூன் மாதம் மூன்றாம் தேதி வரை இதே மீன ராசியில் சனிபகவான் சஞ்சாரம் செய்யப்போகின்றார். இது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தில் ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனிபகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு 2027 வர யோகம் கிடைக்கப் போகின்றது. அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். அனைத்து சிக்கல்களில் இருந்தும் உங்களுக்கு விடுதலை கிடைக்க கூடும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வெற்றி காண்பார்கள் கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்யப் போகின்றார். எதனால் உங்களுக்கு காதல் வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்கும். திருமண வாய்ப்புகள் உங்களை தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகளும் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.

நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வீட்டுச் சூழல் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு யோகம் கிடைக்கும். வெளி நாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கும். சனி பகவான் உங்களுக்கு யோகத்தை கொடுக்க போகின்றார்.

கடக ராசி

சனிபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக மாறப்போகின்றது. நீண்ட நாட்களாக ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

பணம் உங்கள் கைகள் வந்து சேரும். நீண்ட நாட்கள் நிறைவேறாத ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner