Sani Peyarchi: அடுத்த 10 ஆண்டுகளுக்கு சனி பகவான் ஆட்டிப்படைக்க போகும் 4 ராசிகள் இதுதான்! இப்போதே உஷார் ஆகிவிடுங்கள்!-sani bagawan transit until 2034 zodiac signs affected and worship tips for meenam mesham rishabam - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Peyarchi: அடுத்த 10 ஆண்டுகளுக்கு சனி பகவான் ஆட்டிப்படைக்க போகும் 4 ராசிகள் இதுதான்! இப்போதே உஷார் ஆகிவிடுங்கள்!

Sani Peyarchi: அடுத்த 10 ஆண்டுகளுக்கு சனி பகவான் ஆட்டிப்படைக்க போகும் 4 ராசிகள் இதுதான்! இப்போதே உஷார் ஆகிவிடுங்கள்!

Kathiravan V HT Tamil
Aug 24, 2024 08:15 PM IST

Sani Peyarchi: பல விதமான தொழில்களுக்கு காரக கிரகமான சனி பகவான் நீதி தவறாத பண்பு உடையவர் ஆவார். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வரை வாசம் செய்யும் சனி பகவான் அந்த ராசிக்காரருக்கு மிகப்பெரிய வாழ்கை அனுபவத்தை வழங்க கூடிய கிரகமாக உள்ளார்.

Sani Peyarchi: அடுத்த 10 ஆண்டுகளுக்கு சனி பகவான் ஆட்டிப்படைக்க போகும் 4 ராசிகள் இதுதான்! இப்போதே உஷார் ஆகிவிடுங்கள்!
Sani Peyarchi: அடுத்த 10 ஆண்டுகளுக்கு சனி பகவான் ஆட்டிப்படைக்க போகும் 4 ராசிகள் இதுதான்! இப்போதே உஷார் ஆகிவிடுங்கள்!

சனி பகவானின் தாக்கம் 2024ஆம் ஆண்டில் எப்படி இருக்கும்?

சனி பகவான் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு இடம் பெயர்ந்தார்.

இதனால் மகரம் ராசிக்காரர்களுக்கு தற்போது பாத சனியும், கும்பம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியும், மீனம் ராசிக்காரர்களுகு விரைய சனியும் நடைபெற்று வருகின்றது. மேலும் கடகம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியும், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அர்தாஷ்டம சனியும் நடைபெறுகின்றது. 

2025 இல் சனியின் தாக்கம் என்ன?

அடுத்து வர உள்ள 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று, சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதன் மூலம் மகரம் ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த ஏழரை சனி பாதிப்புகள் முழுமையாக நிறைவடைகின்றது. கும்பம் ராசிக்கு பாத சனியும், மீனம் ராசிக்கு ஜென்மசனியும், மேஷம் ராசிக்கு விரைய சனியும் தொடங்க உள்ளது. 

2026ஆம் ஆண்டில் சனி பெயர்ச்சி 

2026ஆம் ஆண்டில் சனி பகவான் எந்த ராசிக்கும் பெயர்ச்சி ஆகவில்லை. 

2027ஆம் ஆண்டில் சனியின் ராசி மாற்றம்

2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி அன்று மீனம் ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆக உள்ளார். 2028 ஆம் ஆண்டில் சனி பகவான் வேறு ராசிக்கு பெயர்ச்சி ஆக மாட்டார்.

2029 ஆம் ஆண்டில் சனியின் பெயர்ச்சி

2029ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி அன்று சனி பகவான் மேஷம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு இடம் பெயர உள்ளார். இதன் மூலம் மீனம் ராசி ஏழரை சனி பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபடும். மேஷம் ராசிக்கு பாதசனியும், ரிஷபம் ராசிக்கு ஜென்ம சனியும், மிதுனம் ராசிக்கு விரைய சனியும் தொடங்கும். 

2030 ஆம் ஆண்டில், சனி ரிஷப ராசியில் இருப்பார். 2031 ஆம் ஆண்டில், சனியின் பெயர்ச்சி மற்ற ராசிகளில் நிகழாது.

2032ஆம் ஆண்டில் சனி பெயர்ச்சி 

2032ஆம் ஆண்டில் மிதுனம் ராசியில் சனிபகவான் சஞ்சரிக்க உள்ளார்.  2033ஆம் ஆண்டு வரை சனி பகவான் அதே ராசியில் சஞ்சரிக்க உள்ளார். 

2034ஆம் ஆண்டில் சனி பெயர்ச்சி

2034 ஆம் ஆண்டு சனி பகவான் கடகம் ராசியில் நுழைவார். 

சனி பகவானின் தாக்கம்!

நிதியின் கிரகம் ஆன சனி பகவானை மகிழ்விக்கவும், அவரது கோபத்தைத் தவிர்க்கவும் எள் தீபம் ஏற்றுவது நல்லது. ஹனுமான் சாலிசா, சனி பகவான் சாலிசா மற்றும் சிவ சாலிசா ஆகியவற்றை தினமும் பாராயணம் செய்வதன் மூலமும் சனி தேவனை மகிழ்விக்க முடியும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.