தமிழ் செய்திகள்  /  Astrology  /  Sani And Sun Conjunct In Aquarius Are Unlucky Signs

Sani and Sun: ஜோடி சேரும் சூரியனும் சனியும்.. ஆட்டம்காணப்போகும் 5 ராசிகள்

Marimuthu M HT Tamil
Jan 27, 2024 02:02 PM IST

சூரிய பகவானும் சனி பகவானும் இணைந்து சஞ்சரிப்பதால் சில ராசியினருகுக் கெடுபலன்கள் கிடைக்கின்றன. அதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.

சூரிய பகவான் சனியின் ராசியில் சஞ்சரிக்கப்போவதால் சில கெடு விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
சூரிய பகவான் சனியின் ராசியில் சஞ்சரிக்கப்போவதால் சில கெடு விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

ட்ரெண்டிங் செய்திகள்

சூரியன் மற்றும் சனியின் இணைவு கும்ப ராசியில் நடக்க இருக்கிறது. இதனால் சில ராசியினர் கெடுபலன்களைச் சந்திக்கவுள்ளனர்.

கடகம்: கடக ராசியினருக்கு வரும் மாதம் கொஞ்சம் தேவையில்லாத பதற்றத்தை உண்டு செய்யும். பணிச்சுமை அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடவேண்டாம். திட்டமிட்டு செய்தால் அனைத்து இடங்களிலும் அலைக்கழிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

சிம்மம்: இந்த ராசியினருக்கு தொழிலில் சுணக்கம் நிகழும். கடன் சொல்லி தான் பலரும் வாங்கிச் செல்வார்கள். கணவன் - மனைவி இடையே நீ பெரிதா, நான் பெரிதா என்ற ஈகோ சண்டைகள் வரலாம். வார்த்தைகளில் கவனம் தேவை.

துலாம்: இந்த ராசியினருக்குத் தங்கள் பணிமீது தங்களுக்கே நம்பிக்கை இருக்காது. வாழ்வில் பகட்டு வாழ்க்கை வாழ விருப்பம் வரும். ஆனால், பணியிடத்திலோ அல்லது தொழிலோ வரவேண்டிய பணம் வராது. உறவுகளுக்கிடையே சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு அதிகம்.

விருச்சிகம்: இந்த ராசியினர், தங்களது இல்லற வாழ்க்கையில் ஈகோ பார்க்கக் கூடாது. விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. கணவன் - மனைவி இடையே சண்டை வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் தாங்கள் விட்டுக்கொடுத்துப்போக வேண்டும். இல்லையேல், வாழ்க்கை கேள்விக்குறியாகும். உறவுகளை நம்பாதீர்கள். பணம் அதிகம் செலவாகும். பணிச்சுமை அதிகரிக்கும்.

கும்பம்: இந்த ராசியினருக்கு சூரியன் - சனியின் சேர்க்கையால் தொழிலில் எக்கச்சக்கப் பிரச்னை வரும். நிதி நிலை மட்டமாக இருக்கும். செலவுகள் எல்லை மீறி போகும். இல்லறத்துணையுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்