தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: செல்வ செழிப்பு பெறவும், வீட்டில் பணபுழக்கத்தை அதிகரிக்க உதவும் சங்கு பூ!

Money Luck: செல்வ செழிப்பு பெறவும், வீட்டில் பணபுழக்கத்தை அதிகரிக்க உதவும் சங்கு பூ!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 15, 2024 11:00 PM IST

நீல நிறத்தில் இருக்கும் சங்கு பூ வீட்டில் வைத்தால் பணத்துக்கு பஞ்சம் இருக்காது. வீட்டில் பணபுழக்கத்தை அதிகரிக்க உதவும். செல்வ செழிப்பு பெறவும், புகழ் கிடைக்கவும் இந்த பூக்களை பூஜையில் பயன்படுத்தினால், உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

செல்வ செழிப்பு பெறவும், வீட்டில் பணபுழக்கத்தை அதிகரிக்கவும் செய்யும் சங்கு பூ
செல்வ செழிப்பு பெறவும், வீட்டில் பணபுழக்கத்தை அதிகரிக்கவும் செய்யும் சங்கு பூ

நாம் அனைவரும் பண சம்பாதிப்பதற்காக அயராது உழைக்கிறாம். எவ்வளவு உழைத்தாலும் கையில் பணம் தங்குவதில்லை என்று சிலர் புலம்புவதுண்டு. கையில் இருக்கும் பணம் கரைவது நமது அலட்சிய செயலாலும், அதிக செலவுகளாலும், சில சமயங்களில் கிரக தோஷம், வாஸ்து தோஷம் போன்றவற்றாலும் ஏற்படுகிறது.

பணம் தொடர்பான பிரச்னைகளை சமாளிக்க வாஸ்து மற்றும் ஜோதிடம் பல வழிகளை கூறுகிறது. அதில் ஒன்றாக இந்த சங்கு பூ செடியை வீட்டில் நடுவது. விஷ்ணு காண்ட மலர் என்றும் அழைக்கப்படும் இந்த செடி வீட்டில் இருந்தால் பணம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இந்த செடியை நம் வீட்டில் நட்டு வளர்ப்பதால் அன்னை லட்சுமி தேவியின் அருட் பார்வை கிடைக்கும், நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் எனவும் சொல்லப்படுகிறது