Samayapuram : சமயபுரம் மாரியம்மன் பட்டினி விரதம் - என்ன காரணம்?
பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருக்கும் சமயபுரம் மாரியம்மன்.
பார்வதி தேவியின் சக்தி உருவமான பிரசித்தி பெற்ற தளமாக சமயபுரம் மாரியம்மன் கோயில் விளங்கி வருகிறது. இந்த கோயிலில் வீற்றிருக்கும் மாரியம்மன் ஸ்ரீரங்கம் கோயிலின் மூலவரைப் போன்று சுதையிலான சுயம்பு வடிவாகும்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த சிலை 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டு அருள் பாலித்து வருகிறது. அம்மனின் இந்த சுயம்பு திருமேனியில் நவகிரகங்களும் உள்ளடங்கி இருக்கிறது.
அதன் காரணமாக இந்த அம்மனை தரிசனம் செய்தால் நவகிரகங்களின் தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாகும். இந்த அம்மன் நவகிரகங்களையும் சர்ப்பங்களாகத் தனது திருமேனியில் வைத்திருக்கிறார்.
தட்சன் யாகத்திற்குச் சென்ற தாட்சாயணியைச் சிவபெருமான் தூக்கி ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது தாட்சாயணியின் திருக் கண்கள் பூமியின் மீது விழுந்தது. அந்த கண்கள் விழுந்த இடம் தான் இது என மிகத் தொன்மையான புராணம் கூறுகிறது.
மாரியம்மன் வடிவங்களில் ஆதி பீடம் இந்த சமயபுரம் ஆகும். இந்த அம்மன் மும்மூர்த்திகளை நோக்கியும், மாய சூரனை வதம் செய்த பாவத்தை போக்கவும், உலக நன்மைக்காகவும் இந்த திருத்தலத்தில் தவம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அனைத்து பாக்கியங்களும் கிடைக்க வேண்டும் அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வது இந்த கோயிலில் தனிச் சிறப்பாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
தொடர்ந்து 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் நேரத்தில் எந்த நைவேத்தியமும் கிடையாது. கரும்புச் சாறு, நீர்மோர் துள்ளு மாவு, இளநீர் போன்றவை மட்டுமே அம்மனுக்குப் படைக்கப்படுகிறது.