Sadhursagara Yogam: மேஷம் முதல் மீனம் வரை! ராஜவாக வாழ வைக்கும் சதுர்சாகர யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sadhursagara Yogam: மேஷம் முதல் மீனம் வரை! ராஜவாக வாழ வைக்கும் சதுர்சாகர யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

Sadhursagara Yogam: மேஷம் முதல் மீனம் வரை! ராஜவாக வாழ வைக்கும் சதுர்சாகர யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

Kathiravan V HT Tamil
Published Jul 11, 2024 09:18 AM IST

Sadhursagara Yogam: சதுர் என்றால் 4 என்று பொருள், உங்கள் லக்னத்தில் இருந்து 4 கேந்திரங்களிலும் கிரகங்கள் இருக்கும் போது இந்த சதுர்சாகர யோகம் உண்டாவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. மேலும் இந்த 4 கேந்திரங்களிலேயே எல்லா கிரங்களிலும் இருக்கும் போது மாபெரும் யோகத்தை அளிக்கும்.

Sadhursagara Yogam: மேஷம் முதல் மீனம் வரை! ராஜவாக வாழ வைக்கும் சதுர்சாகர யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!
Sadhursagara Yogam: மேஷம் முதல் மீனம் வரை! ராஜவாக வாழ வைக்கும் சதுர்சாகர யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

இது போன்ற போட்டோக்கள்

சதுர்சாகர யோகம்

 ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன. அந்த வகையில் பிரம்மனுக்கு நிகரான புகழை தரும் யோகமாக சதுர்சாகர யோகம் விளங்குகின்றது.

சகலத்தையும் பெற்றுத் தரும் யோகங்களில் ஒன்றான சதுர்சாகர யோகமானது ஜாதகரை தனவனாகவும், கல்விமான் ஆகவும், நீண்ட ஆயுள் கொண்டவராக மாற்றும். 

மாபெரும் யோகம்

சதுர் என்றால் 4 என்று பொருள், உங்கள் லக்னத்தில் இருந்து 4 கேந்திரங்களிலும் கிரகங்கள் இருக்கும் போது இந்த சதுர்சாகர யோகம் உண்டாவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. மேலும் இந்த 4 கேந்திரங்களிலேயே எல்லா கிரங்களிலும் இருக்கும் போது மாபெரும் யோகத்தை அளிக்கும். 

உதாரணமாக லக்னம் எனும் ஒன்றாம் வீடு, 4ஆம் இடம் எனும் சுக ஸ்தானம், 7ஆம் இடம் எனும் சப்தம ஸ்தானம், 10ஆம் இடம் எனும் கர்ம ஸ்தானங்களில் எல்லா கிரகங்களும் இருக்க வேண்டும்.

அன்னிய தேசத்தில் நிரந்தர வாசம்

இந்த யோகம் பெற்றவர்கள் புகழ், கௌரவம், அந்தஸ்து, நீண்ட ஆயுள், திடகாத்திரமான் உடல் உள்ளிட்டவை அந்தந்த நேரத்தில் கிடைக்கப்பெரும். அரசனின் பொக்கிஷத்திற்கு காவலாளியாக இருக்கும் நிலை இந்த ஜாதகருக்கு ஏற்படும். அன்னிய தேசத்தில் நிரந்தர வாசம் செய்யக்கூடிய தன்மை இந்த ஜாதகருக்கு இருக்கும். 

முதல் தர சதுர்சாகர யோகம்

வெளிநாடு சென்று புகழை ஈட்டும் தன்மையை இந்த யோகக்காரர்கள் பெருவார்கள். சதுர்சாகர யோகத்தில் பல வகைகள் உண்டு. சர லக்னம் என்று சொல்லக்கூடிய மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய 4 லக்னங்களில் பிறந்து, சதுர்கேந்திரங்கள் வலுப்பெற்றால் முதல் தர சதுர்சாகர யோகம் உண்டாகும். 

ஸ்திர லக்னம் என்று சொல்லக் கூடிய ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய லக்னங்களில் பிறந்து, கேந்திரங்கள் வலுப்பெற்றால் 75 சதவீதம் வரை பலன்கள் கிடைக்கும். 

உபய லக்னம் என சொல்லக்கூடிய மிதுனம், கன்னி, தனுசு, மீனம் லக்னங்களில் பிறந்து கேந்திரங்கள் வலுபெற்றால் மூன்றாம் நிலை சதுர்சாகர யோகம் கிடைக்கும். 

உதாரணமாக மேஷம் லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய வீடுகளில் மட்டும் அனைத்து கிரகங்களும் இருந்தால் இது முதல்தர யோகத்தை தரும். அதே போல் இந்த 4 கேந்திரங்களில் கிரகங்கள் இருந்து பிற இடங்களிலும் கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் வேலை செய்யும். ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய வீடுகளில் கிரகங்கள் இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.