Career Horoscope: ’பணம் கொட்ட ரிஷப ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தொழில்கள்’-rishabam rasi career horoscope navigating success with astrological insights - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Career Horoscope: ’பணம் கொட்ட ரிஷப ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தொழில்கள்’

Career Horoscope: ’பணம் கொட்ட ரிஷப ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தொழில்கள்’

Kathiravan V HT Tamil
Feb 07, 2024 01:44 PM IST

”Rishabam Rasi: ரிஷப ராசிக்காரர்களால் இளம்வயதிலேயே தொழிலில் சாதிக்க முடியாது. அடிமைத் தொழில் செய்த பிறகே சொந்தமாக தொழில் செய்யும் வாய்ப்பு உருவாகும்”

ரிஷபம் ராசி
ரிஷபம் ராசி

சுக்கிரன் ஆதிக்கம் காரணமாக கலை ஆர்வம் கொண்டவர்களாக விளங்கும் ரிஷபம் ராசிக்காரர்கள் பணிகளை பொறுமையாகவும், அமைதியாகவும் அனுகக்கூடியவர்கள். தொழிலில் தன்னை விட உயர்ந்தவர்கள் முதல் தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் வரை அனைவருக்கும் நம்பிக்கை அளிப்பவர்களாகவும், கடின உழைப்பாளிகளாகவும் இவர்கள் விளங்குவர். இயல்பிலேயே தலைமைத்துவ பண்புகள் கொண்ட இவர்கள் தைரியசாலிகளாக் இருப்பர். 

சுக்கிரனை அதிபதியாக கொண்டு இயங்கும் ரிஷபராசி பெண் தன்மையும், இராஜ குணமும் கொண்டது. ஆர்ப்பாட்டம் செய்ய மனம் விரும்பினாலும் அதை செய்யும் துணிவு ரிஷப ராசிக்காரர்களுக்கு இருக்காது.

ஜோதிடத்தில் சந்திரன் உச்சம், ராகு நீசம், சூரியன் பகை, செவ்வாய், சமம், புதன், சனி நட்பு எனும் போக்கை ரிஷபம் ராசி கொண்டுள்ளது.

ரிஷப ராசிக்காரர்களால் இளம் வயதிலேயே தொழிலில் சாதிக்க முடியாது. அடிமைத் தொழில் செய்த பிறகே சொந்தமாக தொழில் செய்யும் வாய்ப்பு உருவாகும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

தொழில் தொடங்கும்போது தன்பெயரில் தொழில் தொடங்காமல் தாய், மகள், காவல் தெய்வம் ஆகியோரில் யாரெனும் ஒருவரின் பெயரை தேர்வு செய்தால் வெற்றி பெறலாம்.

ரிஷப ராசியினர் பேச்சு மற்றும் எழுத்து ஆகிய துறைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக விளங்குவார்கள். 

சுமூகமாக பேசும் திறன் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு நிலம் சார்ந்த தொழில்களான ரியல் எஸ்டேட் தொழில் சுபிட்சம் தரும். 

இரும்பை தவிர்த்து அலுமினியம், பித்தளை, ஈயம் ஆகிய உலோக ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட தொழில்களையும் ரிஷபம் ராசிக்காரரக்ள் செய்யலாம்.

ஒரு சில தசாபுத்திகள் உறுதியாக உள்ளபோது யூரியா உள்ளிட்ட விவசாயம் தொடர்புடைய தொழில்களை செய்யலாம். மேற்கண்ட தொழில்கள் இவர்களுக்கு நல்ல லாபத்தையும், பெயரையும் பெற்றுத் தரும்.