தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kanavu Palangal : இந்த 7 விஷயங்களை நீங்கள் கனவில் கண்டால் பணக்கார யோகம் .. செல்வ செழிப்போடு இருக்க போகிறீர்கள்!

Kanavu Palangal : இந்த 7 விஷயங்களை நீங்கள் கனவில் கண்டால் பணக்கார யோகம் .. செல்வ செழிப்போடு இருக்க போகிறீர்கள்!

Divya Sekar HT Tamil
Apr 23, 2024 11:51 AM IST

Kanavu Palangal : இந்த விஷயங்கள் நீங்கள் கனவில் கண்டால் பணக்காரர் ஆகப் போகிறீர்கள் என்று அர்த்தமாம். அப்படி என்ன விஷயங்கள் நாம் கனவில் கண்டால் பணக்காரர் ஆகப் போகிறோம் என்பது குறித்து பார்க்கலாம்.

கனவு பலன்கள்
கனவு பலன்கள்

இதில் நாம் எந்தெந்த கனவுகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் நமக்கு கிடைக்கப் போகிறது என்பது குறித்து பார்க்கலாம். மனிதர்கள் கனவில் கண்டால், கட்டிடங்களை கனவில் கண்டால்,பொருட்களை கனவில் கண்டால், பஞ்சபூதங்கள் கனவில் வந்தால், பறவைகள் கனவில் வந்தால், தானியங்கள் கனவில் வந்தால், விலங்குகள் கனவில் வந்தால், கோவில்கள் கனவில் வந்தால் என நிறைய கனவு பலன்கள் உள்ளது.

அந்த வகையில் இந்த விஷயங்கள் நீங்கள் கனவில் கண்டால் பணக்காரர் ஆகப் போகிறீர்கள் என்று அர்த்தமாம். அப்படி என்ன விஷயங்கள் நாம் கனவில் கண்டால் பணக்காரர் ஆகப் போகிறோம் என்பது குறித்து பார்க்கலாம்.

விளக்கு

உங்கள் கனவில் விளக்கை கண்டால் அதுவும் விளக்கு எறிவது போல் கனவு கண்டால் உங்கள் வாழ்க்கை மங்களகரமாக இருக்கப் போகிறது என்று அர்த்தமாம். உங்கள் தேவைகள் அனைத்தும் நிவர்த்தி ஆகப்போகிறது என்று அர்த்தமாம். எனவே இந்த மாதிரி கனவு கண்டால் நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும் என்று சாஸ்திரப்படி கூறப்படுகிறது.

காதணி

உங்கள் கனவில் காதணி அதாவது தோடு கண்டால் நீங்கள் பணம் அதிகம் சம்பாதிக்க போகிறீர்கள் என்று அர்த்தமாம். நீங்கள் ஒரு வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்களுக்கு வருமானம் பெறுக அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சாஸ்திரப்படி கனவில் காதணி வந்தால் நல்ல பலன் தரும் என்று அர்த்தமாம்.

மோதிரம்

உங்கள் கனவில் மோதிரம் அணிவது போல் அல்லது மோதிரத்தை கண்டால் லட்சுமிதேவி உங்களை ஆசீர்வதிக்கிறார் என்று அர்த்தமாம். உங்களிடம் பணம் பெருகும். இந்த கனவு உங்களை பணக்காரன் ஆக்கக்கூடிய அம்சத்தை காட்டுகிறது.

பாம்பு

அதேபோல கனவில் பாம்பு வந்தால் ஆபத்து என்பது நம் அனைவரும் பொதுவாக அறிந்த ஒரு விஷயமாக இருக்கும்.ஆனால் இந்த பாம்பு பணப்பெட்டி அருகே இருந்தால் உங்களை தேடி பணம் வரப்போகிறது என்று அர்த்தமாம். கனவு சாஸ்திரப்படி இது சொல்லப்பட்டுள்ளது.

பால்

அதேபோல உங்கள் கனவில் பால் குடிப்பது போல கனவு வந்தால் உங்களைத் தேடி பணம் வரப்போகிறது கையில் பணம் நிறைய போகிறது என்று அர்த்தமாம்.

தங்கம்

அதேபோல கனவில் தங்கத்தை கண்டால் நீங்கள் லட்சுமி தேவியின் அருளைப் பெறப் போகிறீர்கள் என்று அர்த்தமாம். பணம் வீட்டில் குவிய போகிறது அல்லது பணம் வருவதற்கான வாய்ப்பு உங்களுக்கு அமையப் போகிறது என்று அர்த்தமாம்.

ரோஜா, தாமரை

அதேபோல கனவில் ரோஜா மலரை கண்டால் பணம் கொட்டப் போகிறது பணக்காரர் ஆக போகிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. அதேபோல தாமரை மலரை கனவில் கண்டால் லட்சுமி தேவியின் அருள் உங்களுக்கு இருக்கிறது என்பது அர்த்தமாம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்