தமிழ் செய்திகள்  /  Astrology  /  Reparation To Be Done By Separated Husband And Wife

Husband And Wife: பிரிந்த கணவன் - மனைவி ஒன்றுசேர செய்ய வேண்டிய பரிகாரம்!

Marimuthu M HT Tamil
Feb 12, 2024 07:08 PM IST

பிரிந்த கணவன் - மனைவி ஒன்றுசேர செய்ய வேண்டிய பரிகாரம் குறித்துப் பார்க்கலாம்.

பிரிந்த கணவன் - மனைவி ஒன்றுசேர செய்ய வேண்டிய பரிகாரம்!
பிரிந்த கணவன் - மனைவி ஒன்றுசேர செய்ய வேண்டிய பரிகாரம்!

ட்ரெண்டிங் செய்திகள்

கருத்துவேறுபாடு, பிடிவாத குணம், தான் என்ற அகந்தை, தவறான நபரின் வழிகாட்டுதல்கள், சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் போன்ற காரணங்களால் நண்பர்கள், காதலர்கள், திருமணமானவர்கள் கூட சின்னச்சின்ன காரணங்களுக்காகப் பிரிந்து வாழ்கின்றனர்.

தங்கள் அன்புக்குரியவர்களை மீண்டும் பெற, அவரது பாசத்தை மீட்டெடுக்க சில பரிகாரங்கள் உண்டு என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

காலையில் சீக்கிரமாக குளித்துவிட்டு, ஒரு வெண்ணிற காகிதத்தில் மீண்டும் சேர விரும்பும் நபரின் பெயரை, பச்சை நிற பேனாவில் எழுதி குலதெய்வ படத்துக்கு முன் வைத்து, மடித்து வைத்துவிடுங்கள்.

பின் அந்த காகிதத்தின்மேல் ஒரு கற்பூரம், ஒரு ஏலக்காய், ஒரு கிராம்பு போட்டு சில நிமிடங்கள், நீங்கள் சேர நினைக்கும் நபர் உங்களைப் புரிந்துகொண்டு வந்துசேர வேண்டும் என மனம் உருகப் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.

இந்தப் பரிகாரத்தைச் செய்யும்போது ஸ்நானம் செய்துகொள்ளவேண்டும். 48 நாட்கள் இப்பிரார்த்தனையைத் தொடர்ந்து செய்துகொள்ளுங்கள்.கற்பூரத்தை மட்டும் கரைந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். தினமும் மாற்றவேண்டிய அவசியம் கிடையாது. தீபம் காட்டவேண்டாம். இப்படி செய்யும்போது இருவரும் மீண்டும் சேர வாய்ப்புள்ளது. இருவரும் மீண்டும் சந்திக்கும்வாய்ப்பும் அதிகம் உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்