Vastu Pariharam With Salt: தோஷங்களை நீக்க, வீட்டில் செல்வத்தை பெருக்க உதவும் கல் உப்பு வாஸ்து சாஸ்திரம்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vastu Pariharam With Salt: தோஷங்களை நீக்க, வீட்டில் செல்வத்தை பெருக்க உதவும் கல் உப்பு வாஸ்து சாஸ்திரம்

Vastu Pariharam With Salt: தோஷங்களை நீக்க, வீட்டில் செல்வத்தை பெருக்க உதவும் கல் உப்பு வாஸ்து சாஸ்திரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 13, 2024 12:18 PM IST

வீட்டில் இருக்கும் தோஷங்களை நீக்க, வீட்டில் செல்வத்தை பெருக்க கல் உப்பைக் கட்டி செய்யக்கூடிய கல் உப்பு வாஸ்து பரிகாரத்தை பின்பற்றலாம். வீட்டில் உள்ள எதிர்மறையை விரட்டவும், நேர்மறையை வளர்க்கவும் கல் உப்பு மிகவும் உதவியாக இருக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

தோஷங்களை நீக்க, வீட்டில் செல்வத்தை பெருக்க உதவும் கல் உப்பு வாஸ்து சாஸ்திரம்
தோஷங்களை நீக்க, வீட்டில் செல்வத்தை பெருக்க உதவும் கல் உப்பு வாஸ்து சாஸ்திரம்

இது போன்ற போட்டோக்கள்

வாஸ்து தோஷத்துக்கு உப்பு: வாஸ்து சாஸ்திரத்தில் கல் உப்பு மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. இது பிரபஞ்ச சக்தியை வழங்குவதாக கூறப்படுகிறது. கல் உப்பு வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது. வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றும் செயல்பாட்டின் முதல் படியாக கல் உப்பு உள்ளது. வீட்டில் உள்ள எதிர்மறையை விரட்டவும், நேர்மறையை வளர்க்கவும் கல் உப்பு மிகவும் உதவியாக இருக்கும்.

கல் உப்பு வைத்தியம்

வாஸ்து சாஸ்திரத்தின் படி உப்புக்கு அற்புதமான சக்தி உண்டு. பல வாஸ்து சாஸ்திர வல்லுநர்கள் வீட்டில் நேர்மறையை அதிகரிக்க உப்புடன் பல தீர்வுகளை பரிந்துரைக்கின்றனர். இது வீட்டுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று கூறப்படுகிறது.

வீட்டில் பணம் பெருகவும், சகல சௌபாக்கியங்கள் கிடைக்கவும் கல் உப்பை வைத்து சில காரியங்களை செய்ய வேண்டும். இதன் மூலம் வீடு வளம் பெறும். வீட்டில் இருப்பவர்களும் சுபிட்சத்தைப் பெறுவார்கள். கல் உப்பை பயன்படுத்தி உங்கள் வீட்டின் செழிப்பை அதிகரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்

விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்யும் போது கடல் உப்பு பயன்படுத்தப்படுகிறது. கடல் உப்புக்கு பெரும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. கடல் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்குகிறது. கடல் உப்பு என்பது கல் உப்பைத் தவிர வேறில்லை.

உங்கள் வீட்டில் மகிழ்ச்சி வேண்டுமானால், தரையை சுத்தம் செய்யும் போது தண்ணீரில் கல் உப்பை சேர்க்கவும். அது முற்றிலும் கரைந்த பிறகு, அந்த தண்ணீரைக் கொண்டு வீட்டை சுத்தம் செய்யவும். வாஸ்து தோஷம் நீங்க வீட்டில் ஆங்காங்கே உப்பை தடவுவதும் நல்லது.

எதிர்மறை ஆற்றலை உறிஞ்சும் உப்பு

சிலர் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தால் பாதிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் கல் உப்பை தன் முஷ்டியால் எடுத்து கையால் மூட வேண்டும். அதன் பிறகு வாஷ் பேசினில் வைக்கவும். அவ்வாறு செய்யும்போது, ​​​​உப்பு அனைத்தும் வாஷ் பேசின் உள்ளே விழ வேண்டும். வாஷ் பேசின் தரையில் கை படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதைச் செய்வதன் மூலம், உப்பு உங்களிடமிருந்து எதிர்மறை சக்தியை உறிஞ்சிவிடும் என வாஸ்துவில் கூறப்படுகிறது.

உங்கள் வீட்டில் உள்ள சில பொருள்களை உப்பைக் கொண்டு சுத்தம் செய்வது வீட்டில் அமைதியையும் செழிப்பையும் தரும். மேலும், திஷ்டியிலிருந்து விடுபட, ஒரு நபர் தனது கைகளில் கல் உப்பை எடுத்து தலையில் மூன்று முறை சுழற்ற வேண்டும். பின்னர் வாஷ் பேசினில் வைத்து கைகளை கழுவவும். இப்படி செய்வதால் உங்களுக்கு ஏற்பட்ட திஷ்டி காணாமல் போய்விடும்.

ஒரு பாத்திரத்தில் கல் உப்பு போட்டு குளியலறையில் வைக்கவும். இதை வைப்பதால் வீட்டில் நேர்மறை அதிகரிக்கும். வாரம் ஒரு முறை கிண்ணம் மற்றும் உப்பு ஆகியவற்றை மாற்ற வேண்டும். இப்படி செய்வதால் வீட்டுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

உங்கள் குளியலறை வீட்டின் வடகிழக்கு மூலையில் இருந்தால், அங்கு கண்ணாடியை வைப்பதன் மூலம் எதிர்மறையான விளைவுகளை அகற்றலாம். குளியலறையில் நீல கலர் வாளி மற்றும் குவளை பயன்படுத்தினால் வீட்டில் வாஸ்து தோஷ பாதிப்புகள் குறையும்.

குளியலறையின் கதவுகளை எப்போதும் மூடியே வைக்கவும். கதவுகளுக்கு முன் கண்ணாடிகளை தொங்கவிடாதீர்கள். மேலும், உடைந்த கண்ணாடிகள், எலக்ட்ரானிக் பொருள்கள், கைக்கடிகாரங்கள் போன்றவற்றை வைத்திருக்க வேண்டாம். வீட்டில். அவற்றை சரிசெய்யுங்கள் அல்லது அகற்றிவிடுங்கள்.

வீட்டில் போர்களத்தின் படங்கள், அழும் குழந்தைகளின் படங்கள், துன்பப்படுபவர்களின் படங்கள் மற்றும் ஓவியங்கள், புயல்கள் போன்றவை எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதேபோல் சிலர் கற்றாழை செடிகளை வீட்டின் உள்ளே வளர்க்கிறார்கள். ஆனால் கற்றாழை செடிகளை வீட்டில் நடக்கூடாது. கற்றாழையை வீட்டுக்கு வெளியே வைப்பது அதிர்ஷ்டத்தைத் தரும்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner