Ratha Saptami 2025: நாளை ரத சப்தமி.. பூஜை விதி, முகூர்த்தம் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
Ratha Saptami 2025: நாளை ரத சப்தமி.. பூஜை விதி, முகூர்த்தம் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்துப் பார்ப்போம்.

Ratha Saptami 2025: இந்தியா ஒரு தர்ம நாடு ஆகும். எனவே, மத சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்திய சனாதன தர்மத்தில் நாம் பின்பற்றும் மரபுகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் ஒரு காரண காரியத் தொடர்பு உண்டு. இந்து கலாசாரத்தில் செய்யப்படும் அனைத்து வழிபாட்டு முறைகளும் பிரபஞ்சத்தின் கருத்தாக்கங்களில் வெளிப்படுகின்றன.
இந்து நாட்காட்டியின்படி, மாக் சுக்ல சப்தமி அல்லது ரத சப்தமி என்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சூரியக்கடவுளின் பிறந்த நாள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் சூரிய வழிபாட்டாளர்களுக்கு புனிதமானது. சூரியன் ஒவ்வொரு நாளும் நமக்கு தோன்றும் நேரடி தெய்வம்.
இந்த நாளில் சூரிய பகவான் பிறந்தார் என்று கூறப்படுகிறது. அவரை வைத்து ரத சப்தமி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ரத சப்தமி விழா பிப்ரவரி 4-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்த நாளில் பக்தர்கள் சூரிய பகவானுக்கு சிறப்பு பூஜை செய்து விரதம் இருப்பார்கள். இந்து மத புராண நம்பிக்கைகளின்படி, இந்த நாள் சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது.
மனிதர் ஒருவரின் ஆரோக்கியம், வலிமை மற்றும் வெற்றியை அடைவதற்கு இந்த ரத சப்தமி நாள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருப்பது பாவங்களை நீக்கி ஆரோக்கிய நன்மைகளால் நம்மை வளப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
சூரிய பகவானின் ஆசீர்வாதங்களைப் பெறவும், ஆன்மிக ஆற்றலை அதிகரிக்கவும் இந்த நாள் சரியான வாய்ப்பினைத் தருகிறது. எனவே, இந்த ரத சப்தமியின் அதிகாரப்பூர்வ தேதி, பூஜை முறை, நேரம் ஆகியவற்றை அறிந்து கொள்ளுங்கள்.
ரத சப்தமி பூஜை நேரம்:
ரத சப்தமி முகூர்த்த திதி ஆரம்பம் - சப்தமி திதி முடிவு: பிப்ரவரி 04, 2025 - ரத சப்தமி - காலை 04:37 am - 02:30 am - பிப்ரவரி 04, 2025;
ரத சப்தமி ஸ்நான முகூர்த்தம் - நேரம் காலை 05:23 முதல் 07:08 AM வரை;
முகூர்த்த நிமிடங்கள்: 01 மணி 45 நிமிடங்கள்
ரத சப்தமி வழிபாட்டு முறைகள்:
- ரத சப்தமி அன்று விரதம் இருக்க சூரிய உதயத்திற்கு முன் எழுந்து புனித நீராட வேண்டும்.
- விநாயகரை தியானம் செய்யுங்கள்.
- ஒரு செப்பு பாத்திரத்தில் தண்ணீர், சிவப்பு பூக்கள் மற்றும் வெல்லம் சேர்த்து சூரியனுக்கு புனித நீரினை வழங்கவும்.
- அப்படி நீரை விடும்போது, சூரியக் கடவுளைக் காண்பதுபோன்ற திசையில் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
- இந்த நாளில், அப்படி சூரியனுக்கு நீர் விடுகையில், 'ஓம் சூர்யாய நமஹ' என்ற மந்திரத்தை உச்சரிக்கவும்.
- அதன் பிறகு, ஊதுபத்தி அல்லது நெய் தீபத்தை சூரிய கடவுளிடம் காண்பித்து 3 முறை சுற்றவும்.
- இத்தகைய ரத சப்தமி விழாவின்போது வெல்லம், எள், துணி மற்றும் ரொட்டிகளை தானம் செய்வது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்