Lord Shani: தீபாவளிக்குப் பின் சனியினால் உண்டாகும் ஷஷ யோகம்.. குதித்து குதித்து ஜெயிக்கப்போகும் ராசிகள்
Lord Shani: தீபாவளிக்குப் பின் சனியினால் உண்டாகும் ஷஷ யோகம்.. குதித்து குதித்து ஜெயிக்கப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.
Lord Shani: சூரிய பகவானின் புதல்வனான சனி பகவான், நீதிமானாக இருக்கக் கூடியவர்.
இந்து மதத்தில், சனி பகவான் முக்கியமான கிரகமாகப் பார்க்கப்படுகிறார். சனி பகவானின் தாக்கம் பல்வேறு ராசிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சனி பகவான் நியாயவான். அவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குகின்றார். சனி பகவானின் நகர்வு கோபமாக இருந்தால் ஒருவர் பிச்சைக்காரராகவும், சனி பகவானின் நகர்வு மகிழ்ச்சியாக இருந்தால் அவர் ராஜாவாகவும் இருக்கிறார்.
சனி பகவானின் நிலையால் உருவாகும் புதுயோகம்:
சனி பகவானின் நிலை மிக கவனமாக மதிப்பிடப்படுகிறது. சனி பகவான் மெதுவாக நகரும் கிரகங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. சனி பகவான், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகும்.
சனி பகவான் நேராகப்பெயர்ச்சி ஆகும்போதும் சரி, சனி பகவான் பின்னோக்கி செல்லும்போதும் சரி, அதன் பலன்கள் எல்லா ராசிகளிலும் விளைவுகளை ஏற்படுத்தும்.
இத்தகைய சூழலில் தீபாவளிக்கு சில நாட்களுக்குப் பின், சனி பகவான் நேரடியாகப் பயணிக்கிறார். இதனால் சில ராசியினருக்கு, சனி பகவான் அபூர்வ ஷஷ ராஜயோகத்தை உருவாக்குகிறார். அத்தகைய ராசிகள் குறித்துப் பார்ப்போம்.
மேஷம்:
சனி நேரடியாகத் திரும்புவதால் உண்டாகும் அபூர்வ ஷஷ ராஜயோகத்தால், மேஷ ராசியினருக்கு நல்ல பலன் கிடைக்கும். இதனால், மேஷ ராசியினரின் வருவாய் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்ய இதுவே நல்ல தருணம். இதனால், எதிர்காலத்தில் நல்ல லாபகரமான வருவாயைப் பெறலாம்.
ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்துவரும் மேஷ ராசியினருக்கு மிதமிஞ்சிய லாபம் கிட்டும். பணியிடத்தில் இருப்பவர்களுக்கு, இந்த காலகட்டத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும். இதனால் தொழில் முன்னேற்றம் அடையலாம்.
ரிஷபம்:
சனி பகவான் நேரடியாகத் திரும்புவதால் உண்டாகும் ஷஷ ராஜயோகத்தால் ரிஷப ராசியினருக்கு, மிகவும் அற்புதமான பலன்கள் கிடைக்கின்றன. ரிஷப ராசியினரின் வீட்டில், இந்த ராஜயோகம் அமைவதால், தொழில் மற்றும் வேலையில் ரிஷப ராசியினர் முன்னேற்றம் அடையலாம்.
இந்த தருணத்தில் சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு எக்கச்சக்க வாடிக்கையாளர்கள் கிடைப்பர். சனி பகவானின் நேரடிப் பெயர்வால் பணிதேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இது ரிஷப ராசியினருக்கு மகிழ்ச்சியைத் தரும். ரிஷப ராசியினருக்குப் பணிபுரியுமிடத்தில் சில புதிய பொறுப்புகள் கைவசம் வந்துசேரும்.
மகரம்:
சனியின் நேரடி தாக்கத்தால், மகர ராசியினருக்கு உண்டாகும் ஷஷ யோகத்தால் வருவாய் வாய்ப்புகள் அதிகரிக்கும். வாழ்வில் நல்லபெயரைப் பெற மகர ராசியினருக்கு இது சிறந்த நேரம் ஆகும். மகர ராசியினருக்கு பாசமும் சகோதரத்துவமும் குடும்ப வாழ்வில் இருக்கும். மேலும், தொழிலில் வாடிக்கையாளர்கள் பெருக்கத்தால் வருவாய் கூடும். இந்த தன்னம்பிக்கையால், மகர ராசியினர், தங்கள் ஆளுமையில் விநோதமான ஓட்டத்தைக் காணலாம். மகர ராசியினரின் பேச்சு, இயல்பாகவும் பலரை கவரும் விதமாகவும் மாறும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்