Retrograde Guru Bhagavan: ரிவெர்ஸில் வரும் குரு.. வைத்து விளையாடும் கட்டம்.. உதறலைச் சந்திக்கப்போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Retrograde Guru Bhagavan: ரிவெர்ஸில் வரும் குரு.. வைத்து விளையாடும் கட்டம்.. உதறலைச் சந்திக்கப்போகும் ராசிகள்

Retrograde Guru Bhagavan: ரிவெர்ஸில் வரும் குரு.. வைத்து விளையாடும் கட்டம்.. உதறலைச் சந்திக்கப்போகும் ராசிகள்

Marimuthu M HT Tamil
May 05, 2024 04:45 PM IST

Retrograde Guru Bhagavan: குரு பகவானின் சஞ்சாரத்தால், சில ராசியினருக்கு கெடுதல்கள் நடக்கப்போகிறது. எனவே, எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய ராசியினர் குறித்துப் பார்க்கலாம்.

<p>குரு பகவான் &nbsp;</p>
<p>குரு பகவான் &nbsp;</p>

குரு பகவான் மே 1ஆம் தேதி ரிஷப ராசியில் நுழைந்தார். குருவின் இந்த பெயர்ச்சியால் பல ராசியினருக்கு நன்மையும், சில ராசியினருக்கு கெடுதலும் நடக்கலாம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஜோதிடத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க கிரகமாக குரு பகவான் கருதப்படுகிறது. இந்த கிரகங்களின் கடவுளான குரு பகவான், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நுழையும் போது, அது அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்து நாட்காட்டியின்படி, குரு பகவான், வரும் மே 1, 2024 அன்று புதன்கிழமை ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார்.

ரிஷப ராசியில் நுழைந்த பிறகு, குரு பகவான் ரிஷப ராசியில் தனது ஆதிக்கத்தைச் செலுத்துவார். பின்னர் வரும் அக்டோபர் 9, 2024அன்று முதல், குரு பின்னோக்கி செல்லத் தொடங்குவார். அத்தகைய சூழ்நிலையில், சில ராசிக்காரர்களுக்கு நெருக்கடி காலம் அதிகரிக்கும். அப்படி குரு பகவானால், எந்தெந்த ராசியினர் பாதிப்பு அடைவர் என்பது குறித்துப் பார்ப்போம்.

மிதுனம்: இந்த நேரத்தில் மிதுன ராசிக்காரர்களின் நேரம் வீண் ஆகும். வீண் அலைச்சல் ஏற்படும். குரு பகவான் மிதுன ராசியின் 12-ம் வீட்டில் பிரவேசிப்பார். இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு நஷ்டம் ஏற்படும். தேவையற்ற வேலைகளில் ஈடுபடாமல், உங்கள் மேலதிகாரிகளின் ஒப்புதலுடன் மட்டுமே பணிகளைச் செய்யுங்கள். மிதுன ராசியினருக்கு இக்காலகட்டத்தில் பேசும் வார்த்தையில் எச்சரிக்கை தேவை. சிலர் உங்களை ஈஸியாகத் தூண்டினால், கோபம் அடைந்துவிடுவீர்கள். எனவே, எதிலும் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களின் நான்காம் வீட்டின் அதிபதியான குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் நுழைகிறார். இந்த மாற்றம் உங்களுக்கு எந்த வகையிலும் நல்ல பலன்களைத் தராது. தொழில் செய்பவர்களுக்கு வருமானத்தில் நாம் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. கன்னி ராசிக்காரர்களைப் பொறுத்தவரை, இந்த நேரத்தில் புதிய சொத்து வாங்க முயற்சிக்கக் கூடாது. மேலும், யாருக்கும் இக்காலத்தில் கடன் கொடுக்கக் கூடாது. யாரிடமும் வாக்குவாதமும் செய்ய யோசிக்க வேண்டும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களின் உறவு மோசமடையும். துலாம் ராசியின் எட்டாம் வீட்டில் குரு பகவான் நுழைவார். துலாம் ராசிக்காரர்கள் மே 1ஆம் தேதி முதல் ஒன்றன் பின் ஒன்றாக பிரச்னைகளை எதிர்கொள்வார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். துலாம் ராசிக்காரர்கள் நிதி நெருக்கடியால் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படுவார்கள். எனவே, ஒரு செலவு செய்வதற்கு முன், பல வகைகளில் யோசிக்க வேண்டும். துலாம் ராசியினர் வாழ்வில் இருக்கும் பிரச்னைகளை மற்றவர்களிடம் பகிரக் கூடாது. பகிர்ந்தால், அந்தப் பிரச்னை இன்னும் வேறுமாதிரி பெரிதாகிவிடும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

Whats_app_banner

டாபிக்ஸ்