தமிழ் செய்திகள்  /  Astrology  /  Rasis To Be Cautious Due To Change In Lord Saturn's Course

Sani: சனி பகவானின் போக்கில் உண்டாகும் மாற்றம்.. எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய ராசிகள்

Marimuthu M HT Tamil
Feb 05, 2024 03:50 PM IST

சனி பகவானால் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.

சனி பகவான்
சனி பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

சனி பகவானின் பார்வை ஒருவரது ராசியில் நல்லமுறையில் இருந்தால் நல்ல வசதி வாய்ப்புகளையும், மோசமான நிலையில் வாழ்வில் ஏராளமான பிரச்னைகளையும் உருவாக்குவார். தற்போது சனி பகவான், மூல திரிகோண ராசியான கும்பத்தில் பயணித்து வருகிறார்.

சுமார் 3 தசாப்தங்களுக்குப் பிறகு, சனி பகவான், தனதுசொந்த ராசியான கும்பத்தில் பயணித்து வருகிறார். இதனிடையே 2024ல் சனி பகவான் பிப்ரவரி 11ஆம் தேதி அஸ்தமனம் ஆகவுள்ளார். இதனால் சில ராசியினர், மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என ஜோதிட சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை குறித்துப் பார்ப்போம்.

தனுசு: இந்த ராசியின் 3ஆம் இடத்தில் சனி பகவான் அஸ்தமனம் ஆகிறார். அதனால், தனுசு ராசியினருக்கு ஏராளமான சறுக்கல்கள் ஏற்படலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு டல் அடிக்கும். தொழில் முனைவோருக்கு வரவேண்டிய இடத்தில் இருந்து பணம் வராது. வாழ்க்கையில் பொருளாதாரச் சரிவு நிலை காணப்படும். வாகனங்களில் கவனமாகப் பயணிக்கவேண்டும். பணியிடத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத குடைச்சல் வரும்.

துலாம்: இந்த ராசியின் 5ஆம் இடத்தில் சனி அஸ்தமனம் ஆகவுள்ளார். புதல்வன் மற்றும் புதல்விகளால் பல்வேறு சிக்கல் ஏற்படலாம். பிள்ளைகளில் நினைவு ஆற்றல் மழுங்கும். உடல் நலம்பாதிக்கப்படலாம். தொழில் செய்பவர்கள் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. பணியிடத்தில் பணி செய்பவர்கள் சின்சியராகப் பணிசெய்யவில்லை என்றால், வேலை காலி ஆகும் சூழல் கூட உருவாகும்.

கன்னி: இந்த ராசியின் 6ம் இடத்தில் சனி பகவான் அஸ்தமனம் ஆகிறார். பேசும்போதும் ஒரு செயலைச் செய்யும்போது ஒரு தடவைக்கு இருதடவை யோசித்துச் செய்யவேண்டும். கடுமையான உழைப்பினைப் போட்டாலும் உரிய அங்கீகாரம் கிடைக்காது. அதை நினைத்து கவலைப்படாமல் நேர்மையாக அதனை செய்துவிட்டுச் செல்லவேண்டும்.  கடனாளி ஆக வாய்ப்பு இருப்பதால், நிதி மேலாண்மையைக் கவனமாக கையாளவேண்டும். பணியிடத்தில் அலுவலக அரசியலில் சிக்கக் கூடும். பொறுமை காக்கவும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்