Guru Transit: ‘குரு இப்படி கூட செய்வாரா?’ - குரு பார்வையால் துன்பத்தைப் பெறப்போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Transit: ‘குரு இப்படி கூட செய்வாரா?’ - குரு பார்வையால் துன்பத்தைப் பெறப்போகும் ராசிகள்

Guru Transit: ‘குரு இப்படி கூட செய்வாரா?’ - குரு பார்வையால் துன்பத்தைப் பெறப்போகும் ராசிகள்

Marimuthu M HT Tamil Published Apr 09, 2024 04:53 PM IST
Marimuthu M HT Tamil
Published Apr 09, 2024 04:53 PM IST

Guru Transit: குரு பெயர்ச்சியால் துரதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

இது போன்ற போட்டோக்கள்

வரக்கூடிய மே ஒன்றாம் தேதி குரு பெயர்ச்சி நடக்கயிருக்கிறது. பொதுவாகவே குரு பகவான் நன்மைகளை செய்யக்கூடிய கிரகமாக இருந்தாலும், அது பெயர்ச்சி ஆகும் நேரம், ஒவ்வொரு ராசியில் நடப்பில் இருக்கும் திசைகள் ஆகியவையும் குரு பார்வையால் நன்மையினையும், தீமையினையும் உண்டாக்குகின்றன. அப்படி குரு பெயர்ச்சிக்குப் பின் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.

மிதுனம்: குருவின் பார்வையும் வீச்சும் உங்கள் ராசிக்கு, நான்கு, ஆறு மற்றும் எட்டு ஆகிய இடங்களில் வரயிருக்கிறது. இந்த காலகட்டத்தில் சுப விரயம் நடக்கும். தேக பாதிப்பு உண்டாகலாம். சிறுநீரக மற்றும் வயிற்று உபாதைகள் உண்டாகலாம். இந்த காலத்தில் புதிய தொழில் தொடங்காமல் இருப்பது, புதிதாக இன்வெஸ்ட் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம் ஆகும். வேறு வழியில்லை இன்வெஸ்ட் செய்துதான் ஆகவேண்டும் என்றால், பல முறை யோசித்து, அதன் நிறை - குறைகளை ஆராய்ந்து இன்வெஸ்ட் செய்தால் ஓரளவு பரவாயில்லாமல் இருக்கும். சிலருக்கு, அடுத்தாண்டு மே மாதம் வரை, திருமணம் செட்டாகாமல் இழுத்தடிக்கலாம். கணவன் - மனைவி இடையில் சண்டை சச்சரவுகள் வந்துபோகும். நிம்மதியில்லாத சூழல் நிலவும். பொறுமை காப்பது நல்லது.

கடகம்: நீரில் வாழும் கடகத்திற்கு இதமான அதிபதி என்றால், ராசி அதிபதி சந்திரன் ஆவார். வரக்கூடிய மே1ஆம் தேதி முதல் குரு பகவான் நல்ல பலன்களை அள்ளித்தந்தாலும் சில இடங்களில் குட்டும் வைப்பார். கையில் பணம் இருக்கும் நிம்மதியாக தூங்க முடியாத நிலை என்பார்களே அந்த நிலை உங்களுக்கு வரலாம். அதுவும் நேரம் என்று பொறுமையுடன் இருங்கள். பணியிடத்தில் மன அழுத்தம், தொழிலில் போட்டி உண்டாவதைத் தவிர்க்க முடியாது. வருவாய் அதிகம் வருவதால், அதை இன்னும் பெரிதாக்கலாம் என எண்ணி கடன் வாங்கக் கூடாது. மற்றவர்களைத் தோற்கடிக்க முயற்சித்தால் கடக ராசியினர் தோற்றுப்போகக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. எனவே, பழிவாங்கும் எண்ணத்தைத் தவிருங்கள். பிறரைப் பற்றி இன்னொருவரிடம் குறை சொல்லாதீர்கள். அது வில்லங்கமாக நமக்குத் திரும்பவரலாம். பேச்சினை குறைத்தால் நன்மை உண்டாகும்.

துலாம்: துலாம் ராசியினருக்கு, குரு பெயர்ச்சிக்குப் பிந்தைய காலகட்டம் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. வண்டி,வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. விபத்து கண்டம் இருப்பதால் கவனம் வேண்டும். உங்களுடைய மாத வருவாயில் பெருமளவு செலவாகும். அதைத் தடுக்க முயற்சித்தாலும் அது வீணாகும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள், யாருக்கும் முன் ஜாமீன் போடாதீர்கள், யாருக்கும் உறுதி கொடுக்காதீர்கள். வீட்டடி மனைகளை வாங்குவது நல்லது. காரத்தைக் குறைத்துக் கொள்வது,சரியான நேரத்துக்கு உண்பது வயிற்றின் ஆரோக்கியத்துக்கு உதவும்.

தனுசு: இந்த காலகட்டத்தில் பிரச்னைகள் வரும். வந்தாலும் சமாளிக்கக் கூடிய தெம்பு உங்களிடம் இருக்கும். பணத்தை வைப்புத்தொகையாக்குங்கள். இல்லையென்றால், கல்யாணம் செய்வது, வீடு கட்டுவது போன்ற வேலைகள் இருந்தால் செய்யவும். ஆனால், கையில் மட்டும் பணத்தினை வைத்திருக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். எதிரிகளால் கடுமையான வார்த்தைகளை விடும் சூழல் நிலவும். பொறுமையைக் கையாளுங்கள். நம்மை தோல்வியாளன்,கோழை எனப் பிறர் நினைத்தால் அதையெல்லாம் நினைத்து கண்டுகொள்ளாதே. நினைவாற்றல் குறையும். மன அழுத்தம் அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்