Retrograde Move Of Ketu: ஹஸ்த நட்சத்திரத்தின் 2ஆம் பாதத்தில் பின்னோக்கி நகர்ந்த கேது பகவான்.. கண்ணீரில் சிக்கிய ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Retrograde Move Of Ketu: ஹஸ்த நட்சத்திரத்தின் 2ஆம் பாதத்தில் பின்னோக்கி நகர்ந்த கேது பகவான்.. கண்ணீரில் சிக்கிய ராசிகள்

Retrograde Move Of Ketu: ஹஸ்த நட்சத்திரத்தின் 2ஆம் பாதத்தில் பின்னோக்கி நகர்ந்த கேது பகவான்.. கண்ணீரில் சிக்கிய ராசிகள்

Marimuthu M HT Tamil
Jul 09, 2024 11:48 AM IST

Retrograde Move Of Ketu: ஹஸ்த நட்சத்திரத்தின் 2ஆம் பாதத்தில் பின்னோக்கி நகர்ந்த கேது பகவானால் கண்ணீரில் சிக்கிய ராசிகள் குறித்துக் காண்போம்.

Retrograde Move Of Ketu: ஹஸ்த நட்சத்திரத்தின் 2ஆம் பாதத்தில் பின்னோக்கி நகர்ந்த கேது பகவான்.. கண்ணீரில் சிக்கிய ராசிகள்
Retrograde Move Of Ketu: ஹஸ்த நட்சத்திரத்தின் 2ஆம் பாதத்தில் பின்னோக்கி நகர்ந்த கேது பகவான்.. கண்ணீரில் சிக்கிய ராசிகள்

கேது பகவானின் மாற்றத்தால் கெட்டதுபெறும் ராசிகள்:

வரும் செப்டம்பர் 8 வரை, கன்னி ராசியின் ஹஸ்த நட்சத்திரத்தில் கேது பகவான் இருப்பார்.  ஜூலை 8ஆம் தேதியான நேற்று, கன்னிராசியின் ஹஸ்த நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில், கேது பகவான் பின்னோக்கி நகரப்போகிறார். இது பலருக்கு நன்மை தராது.

கடந்த ஜூலை 8ஆம் தேதி கேதுவின் நட்சத்திர மாற்றத்தில், பின்னோக்கிய மாற்றம் காரணமாக எந்த ராசிக்காரர்களுக்கு பதற்றம் அதிகரிக்கப்போகிறது என்பது குறித்து கீழே பார்ப்போம். நமக்கு துன்பம் தரும் கேது கிரகத்தை மகிழ்விக்க, கேது கிரஹ மந்திரத்தைப் பாராயணம் செய்யலாம். அதன்படி,

’’கேது ஓம் ப்ரம் ப்ராம் ப்ரும் ஸஹ ரஹ்வே நமஹ’’

‘’ஓம் ரா ரஹ்வே நம'' எனும் மந்திரத்தை உச்சரிக்கவும்.

சரி, கேதுவின் ஹஸ்தம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பின்னோக்கிய நகர்வினால், துரதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

கேதுவின் பின்னோக்கிய நகர்வினால் துரதிர்ஷ்டம்பெறும் ராசிகள்:

துலாம்:

கன்னி ராசியின் ஹஸ்த நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தில் கேதுவின் பெயர்ச்சி உங்களுக்கு மங்களகரமானதாக இல்லை. பொருளாதார வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். நீங்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேலைகளை முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எதிரிகளால் தொல்லை அதிகரிக்கும். எனவே, எதிர்வினையாற்றாமல் அமைதியாக செல்வது பெரும்சேதத்தைத் தவிர்க்க உதவும்.

கன்னி:

கன்னி ராசியின் ஹஸ்த நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தில் கேதுவின் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு அதிக கெடுதல்களைத் தரும். தொழிலில், சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படலாம். பொருளாதார பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். அளவுக்கு மீறிய செலவுகள் மனதை தொந்தரவு செய்யும். தேவையற்ற மன அழுத்தம் உருவாகலாம். அதில் இருந்து எச்சரிக்கையாக இருந்து தப்பிக்க வேண்டும். திருமணமானவர்களுக்கு உறவில் நிம்மதி இருக்காது.

கடகம்:

கன்னி ராசியின் ஹஸ்த நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தில் கேதுவின் பெயர்ச்சி, கடக ராசிக்காரர்களுக்கு நன்மையைத் தராது. பொருளாதார நிலைமையில் வீழ்ச்சி உண்டாகலாம். பணஇழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் எதிர்மறையாக உணரலாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். உடல்நலமும் மனநலமும் மோசமடையக்கூடும். கணவன் - மனைவி பிரச்னையில் கடகராசியினர், வாயே திறக்கக் கூடாது. அப்படியிருப்பதுதான் நல்லது. தொழிலும் பொறுமை மிக முக்கியம். கடக ராசியினர் இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட கேது கிரஹ மந்திரத்தைப் பாராயணம் செய்வது நல்லது.

பொறுப்புத் துறப்பு: 

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

Whats_app_banner

டாபிக்ஸ்