Mercury: கும்பராசியில் குடியேறும் புதன்.. கும்பாபிஷேக வாழ்வு பெறப்போகும் ராசிகள்-rasis favoured by transit of mercury in kumbarasi - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mercury: கும்பராசியில் குடியேறும் புதன்.. கும்பாபிஷேக வாழ்வு பெறப்போகும் ராசிகள்

Mercury: கும்பராசியில் குடியேறும் புதன்.. கும்பாபிஷேக வாழ்வு பெறப்போகும் ராசிகள்

Marimuthu M HT Tamil
Jan 23, 2024 05:44 PM IST

கும்பராசியில் சஞ்சரிக்கப்போகும் புதன் கிரகத்தால் மகிழ்ச்சியைப் பெறப்போகும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

<p> புதன் பகவான் &nbsp;<br>&nbsp;</p>
<p> புதன் பகவான் &nbsp;<br>&nbsp;</p>

வரும் பிப்ரவரி 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6:07 மணிக்கு புதன் கிரகம், சனியின் ராசியான கும்பத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் சில ராசியினர் நற்பலன்களையும், சில ராசியினர் கெடுபலன்களையும் பெறுவர். அப்படி, மகிழ்ச்சியினைப் பெறும் அதிர்ஷ்டக்கார ராசிகள் குறித்துக் காண்போம்.

கும்பம்: கும்பத்தில் புதன் சஞ்சரிக்கத் தொடங்கும்போது வாழ்வில் நல்ல இன்பமயமான மாற்றம் உண்டாகும். வீட்டில் இருந்த கடன் தொல்லைகள் மாறும். தொழிலில் இருந்த சுணக்கம் மறையும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய ஏற்றகாலகட்டம் இது.

விருச்சிகம்: கும்பத்தில் ஏறிய புதனால் விருச்சிக ராசியினருக்கு பணவரவு உண்டாகும். பிரிந்து இருந்த கணவன் - மனைவி சேர்வார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து நற்செய்தியைப் பெறுவீர்கள். விதியின் வசத்தால் நீங்கள் செய்த கெட்ட செயல்களுக்கு மருந்துபோடுவீர்கள். அந்த வகையில் விட்டுக்கொடுத்து செயல்பட்டு, வீட்டில் மகிழ்ச்சியை உண்டாக்குவீர்கள்.

தனுசு: இந்த ராசியினருக்கு குழப்பமான மனநிலை மாறி தெளிவு கிடைக்கும். தனுசு ராசியினர் மேற்படிப்பு படிக்கும் சூழலைப் பெறுவார்கள். நினைவாற்றல் மேம்படும் என்பதால் அரசு வேலைக்குப் படிக்கத் தொடங்கலாம். இக்காலகட்டத்தில் வாழ்வில் சந்தோஷம் பொங்கும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்