Shukran: பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிர பகவான்.. யாருக்கு எல்லாம் அதிர்ஷ்டம் கைமேல் பலன் தரப்போகிறது?-rasis favoured by lord shukra or shukran entering puratathi nakshatra - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Shukran: பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிர பகவான்.. யாருக்கு எல்லாம் அதிர்ஷ்டம் கைமேல் பலன் தரப்போகிறது?

Shukran: பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிர பகவான்.. யாருக்கு எல்லாம் அதிர்ஷ்டம் கைமேல் பலன் தரப்போகிறது?

Marimuthu M HT Tamil
Aug 08, 2024 05:45 PM IST

Shukran: பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிர பகவானின் நிலையால், யாருக்கு எல்லாம் அதிர்ஷ்டம் கைமேல் பலன் தரப்போகிறது என்பது குறித்துப் பார்ப்போம்.

Shukran: பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிர பகவான்.. யாருக்கு எல்லாம் அதிர்ஷ்டம் கைமேல் பலன் தரப்போகிறது?
Shukran: பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிர பகவான்.. யாருக்கு எல்லாம் அதிர்ஷ்டம் கைமேல் பலன் தரப்போகிறது?

இந்த நேரத்தில் சுக்கிர பகவான், வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைய இருக்கிறார். அங்கு சுக்கிர பகவான் ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை, இந்த ராசியில் சஞ்சரிப்பார்.

பூரட்டாதி நட்சத்திரத்தின் குணங்கள்:

பூரட்டாதி நட்சத்திரம் என்பது குரு பகவானின் மூன்று நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் கும்ப ராசியிலும், நான்காவது பாதம் மீன ராசியிலும் விழுகிறது. இதனால் இந்த நட்சத்திரத்திற்கு கால் அற்ற நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுமை மிகுந்தவர்களாகவும், பெருந்தன்மை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு வாக்கு பலிதம் சக்தி இருக்கும். சமூகத்தில் பெரிய மனிதர்கள் தொடர்பு இவர்களுக்கு எப்போதும் இருக்கும்.

சுக்கிர பகவானின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் சில ராசியினருக்கு சுபமான விளைவை ஏற்படுத்தும். சுக்கிர பகவானின் அருளால், எந்த ராசிக்காரர்கள் நன்மை தரக்கூடிய மாற்றத்தைப் பெறப்போகிறார்கள் என்பது குறித்துப் பார்ப்போம்.

மிதுனம்:

சுக்கிரபகவானின் பூரட்டாதி நட்சத்திர மாற்றம் மிதுன ராசிக்காரர்களின் தைரியத்தையும், பராக்கிரமத்தையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியைக் கூட்டும். மிதுன ராசியினரின் தொழில், வருமானம் அதிகரிப்பு ஏற்படலாம். இந்த நேரம் வியாபாரிகளுக்கு லாபகரமானதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இந்த காலகட்டத்தில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் நிதானமும் பொறுமையும் இனி கை வந்து சேரும்.

கடகம்:

சுக்கிர பகவானின் பூரட்டாதி நட்சத்திரமாற்றத்தால், கடக ராசியினர் அதிர்ஷ்டம்பெறுவர். தொழிலில் புதிய அடையாளத்தை கடக ராசியினர் இந்த காலத்தில் உருவாக்க முடியும். வணிகர்கள் இந்த காலகட்டத்தில் லாபம் ஈட்ட முடியும். தொழில் முனைவோருக்கு செல்வம் பெருகும். அதிர்ஷ்டவசமாக, நீங்கள் நீண்டகாலமாக செய்யாமல் இருந்த சில வேலைகளை இந்த காலத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்துடன் நிம்மதியாக பொழுதைச் செலவிடுவீர்கள்.

துலாம்:

சுக்கிர பகவானின் பூரட்டாதி நட்சத்திரமாற்றத்தால், துலாம் ராசியினர் வருமானத்தை அபரிமிதமாக அதிகரிக்கலாம். பணியிடத்தில் இருப்பவர்களுக்கு தன் திறமையை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் கிட்டும். அதிர்ஷ்டவசமாக, இழுபறியாக இருக்கும் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

கும்பம்:

சுக்கிர பகவானின் பூரட்டாதி நட்சத்திரப் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். சுக்கிர பகவானின் பெயர்ச்சியின் தாக்கத்தால் செல்வம் அதிகரிக்கும். பணம் தொடர்பான பிரச்னை இருக்காது. வணிக வர்க்கத்தினருக்கு விரிவாக்கத்திற்கான பல வாய்ப்புகள் உருவாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்